தாலாய் ஆறு (Dhalai River) என்பது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லைகளை கடந்து செல்லும் ஓர் ஆறாகும். தாலா ஆறு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்திய மாநிலமான திரிபுராவின் மலைகளில் இந்த ஆறு தோன்றுகிறது. வங்காளதேசத்தின் மௌலிபசார் மாவட்டத்தின் கமல்கஞ்ச் துணை மாவட்டத்தில் நுழைகிறது. பின்னர், இது இராச்நகர் துணை மாவட்டத்தில் உள்ள மனு ஆற்றுடன் இணைகிறது.[1][2] அம்பாசாவில் உள்ள தலாய் ஆற்றின் புவியியல் கூறுகள் 23.55'128 வடக்கு மற்றும் 91.51'204 கிழக்கு பாகைகள் , நிமிடங்கள், வினாடிகளாகும். இந்த 117 கிலோமீட்டர்கள் (73 மைல்) நீளமான ஆறு அதரமுரா மலையில் உருவாகிறது. அம்பாசா, பரலுத்மா மற்றும் கமல்பூர் ஆகிய நகரங்கள் தாலாய் நகரின் சில பிரபலமான ஆற்றங்கரை நகரங்களாகும்.

தாலாய் ஆறு
Dhalai River
படிமம்:Dhalai River near Kamalpur.jpg
கமல்பூர், இந்தியா அருகே தாலாய் ஆறு
அமைவு
Countriesஇந்தியா மற்றும் வங்காளதேசம்
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மௌலிபசார்
நகரங்கள்
சிறப்புக்கூறுகள்
மூலம்சிவாலிக் மலை
 • அமைவுதிரிபுரா, இந்தியா
முகத்துவாரம்மனு ஆறு
 • அமைவு
இராச்நகர் துணைமாவட்டம், வங்காளதேசம்
நீளம்117 km (73 mi)

படக்காட்சியகம்

தாலாய் ஆறு அகலக்காட்சி
தாலாய் ஆறு அகலக்காட்சி
படிமம்:Dhalai River at Kamalpur.jpg
கலல்பூருக்கு அருகில் தாலாய் ஆறு
படிமம்:Dhalai River behind tree.jpg
மரங்களுக்குப் பின்னால் தாலாய் ஆறு

மேற்கோள்கள்

  1. Murshed, Md Mahbub (2012). "Dhala River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
  2. "Rivers of Tripura". Tripura State Pollution Control Board. Retrieved 19 November 2012.
"https://tamilar.wiki/w/index.php?title=தாலாய்_ஆறு&oldid=394051" இலிருந்து மீள்விக்கப்பட்டது