துட்டு (Duit, பன்மை: duiten ; ஆங்கிலம்: doit[1] ) என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும்.[2] 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில்[3] இடச்சுக் குடியரசின் பிரதேசங்களில் புழக்கத்துக்கு வந்து, ஒரு சர்வதேச நாணயமாக மாறியது.[4][5] இதன் மதிப்பு 1/8 ஸ்டூவர் ஆகும். [4]

1735 ஆம் ஆண்டு செப்பு துட்டு நாணயம், முன்புறத்தில் இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் பொறிப்பெழுத்து மற்றும் பின்புறத்தில் ஒல்லாந்தின் மணிமுடி சின்னம்.

சொற்பிறப்பியல்

சொற்பிறப்பியல் ரீதியாக, துட்டு என்ற சொல் மத்திய டச்சு மொழியிலிருந்து வந்தது. மேலும் இது ஒரு வகை சிறிய நாணயத்தைக் குறிக்கிறது.[1]

வரலாறு

 
சீலாந்திலிருந்த துட்டு (1769)

கடத்தலைத் தடுக்கும் பொருட்டு இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (VOC) பொறிப்பெழுத்து பொறிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயம் முதன்முதலில் 17-ஆம் நூற்றாண்டில் இடச்சு குடியரசில் அச்சிடப்பட்டது, மேலும் 1816-ஆம் ஆண்டு வரை நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது, பின்னர் அது செண்டு, ½ செண்டுகளால் மாற்றப்பட்டது. பின்னர் இது பன்னாட்டு நாணயமாக மாறியது. இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், டச்சு சிலோன், டச்சு மலபார் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டது. [5] காலனித்துவ ஆட்சியின் போது இந்தோனேசியாவில் இவ்வகையான நாணயங்கள் மட்டுமே செல்லுபடியாகுவதாக இருந்தது. துட்டு நாணயங்களுக்கான மிகப்பெரிய இலக்கு சாவகம் ஆகும். [5] இடச்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது நியூ ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயார்க் நகரம்), சுரினாம் போன்ற அமெரிக்காவின் சில பகுதிகளிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது; ஆப்பிரிக்காவில் டச்சு கேப் காலனியிலும் பயன்படுத்தப்பட்டது.[4]

மதிப்பு

நெதர்லாந்தில் பயன்பாட்டின்படி, 8 துட்டுகள் ஒரு ஸ்டூவருக்குச் சமம் மற்றும் 160 துட்டுகள் ஒரு கில்டருக்குச் சமம். 1726 ஆம் ஆண்டு இடச்சு கிழக்கு இந்திய காலனியில் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டபோது, அது ஒரு ஸ்டூவரின் கால் பங்கிற்குச் சமமாக இருந்தது (அதாவது 4 துட்டு = 1 ஸ்டூயிவர்).

துவக்கத்தில் துட்டு நாணயங்கள் தாமிரத்தில் அச்சிடப்பட்டன, ஆனால் துட்டின் மாதிரி நாணயங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் அச்சிடப்பட்டன.[6]

தமிழில்

டச்சு இந்தியாவிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது, இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக்] குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "doit". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.  (Subscription or participating institution membership required.) - "A small Dutch coin formerly in use, the eighth part of a stiver, or the half of an English farthing; hence (chiefly in negative phrases) as the type of a very small or trifling sum."
  2. Van Dale Groot woordenboek der Nederlandse taal (Eerste deel). Utrecht/Antwerpen: Van Dale Lexicografie. 1984. p. 678. ISBN 90-6648-402-0.
  3. Hazlitt, William Carew (1897). Supplement to the Coinage of the European Continent. London: Swan Sonnenschein. p. 63. Retrieved 14 April 2024. The earliest duit which we have seen is of 1614; and there is also a separate colonial series down at least to 1794.
  4. 4.0 4.1 4.2 "Duit". Winkler Prins Encyclopaedie. (1947). Amsterdam/Brussels: Elsevier. 
  5. 5.0 5.1 5.2 Shimada 2006, ப. 94.
  6. "Verouderd, antiek of achterhaald | Klantenservice | Ziggo". 3 January 2022. Archived from the original on 7 June 2011. Retrieved 6 May 2010.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=துட்டு&oldid=401204" இலிருந்து மீள்விக்கப்பட்டது