தோடனேரி
தோடனேரி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் தோடனேரி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
தோடனேரி | |
|---|---|
தோடனேரி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 9°59′28″N 78°02′08″E / 9.9912°N 78.0356°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மதுரை |
| ஏற்றம் | 180.98 m (593.77 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,479 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 625402[1] |
| புறநகர்ப் பகுதிகள் | சமயநல்லூர், தேனூர் |
| மக்களவைத் தொகுதி | தேனி |
| சட்டமன்றத் தொகுதி | சோழவந்தான் |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 180.98 மீ. உயரத்தில், (9°59′28″N 78°02′08″E / 9.9912°N 78.0356°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தோடனேரி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், தோடனேரி ஊரின் மொத்த மக்கள்தொகை 1,479 பேர் ஆகும். இதில் 754 பேர் ஆண்கள் மற்றும் 725 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
அய்யனார் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று தோடனேரி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
தோடனேரி பகுதியானது, சோழவந்தான் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தேனி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ "Thodaneri Pin Code - 625402, All Post Office Areas PIN Codes, Search madurai Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-02-03.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Thodaneri (தோடனேரி )". localbodydata.com. Retrieved 2025-02-03.
- ↑ "Villages in the block Madurai-West". www.etamilnadu.org. Retrieved 2025-02-03.
- ↑ "Thodaneri Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-02-03.
- ↑ "Arulmigu Ayyanar Temple, Thodaneri - 625402, Madurai District [TM032693].,". hrce.tn.gov.in. Retrieved 2025-02-03.
- ↑ "Thodaneri Locality". www.onefivenine.com. Retrieved 2025-02-03.