தோரெனூர் (Thorenoor) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள குடகு மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கிராமமாகும்.[1]

தோரெனூர்
Thorenoor

கிராமம்
தோரெனூர் Thorenoor is located in கருநாடகம்
தோரெனூர் Thorenoor
தோரெனூர்
Thorenoor
இந்தியாவின் கர்நாடகாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°38′26″N 75°46′47″E / 12.6404236°N 75.7797238°E / 12.6404236; 75.7797238
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஐ.என்-கே.ஏ

அமைவிடம்

கர்நாடக மாநிலத்தில் குசால் நகருக்கும் ஆசன் நகரத்திற்கும் இடையே தோரெனூர் கிராமம் அமைந்துள்ளது.

நிர்வாகம்

குடகு மாவட்டத்தில் உள்ள சோமவாரப்பேட்டை தாலுகாவின் ஒரு பகுதியாக தோரெனூர் கிராமம் நிர்வகிக்கப்படுகிறது.[2]

தொல்லியல் தளம்

தோரெனூரில் ஒரு பெருங்கற்கால புதைகுழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிர்வா கிராமத்தின் எம்.எசு.ஆர்.எசு. கல்லூரியின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் பேராசிரியர் டி. முருகேசி நடத்திய தொல்பொருள் ஆய்வின் போது இத்தளம் கண்டுபிடிக்கப்பட்டது.[3]

கல்வி

தோரெனூர் அரசு மேல்நிலைப் பள்ளி 1920 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தப் பள்ளியில் 1,465 புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகம் உள்ளது. பள்ளியில் ஏழு வகுப்பறைகள் மற்றும் ஏழு ஆசிரியர்கள் உள்ளனர்.[4]

படக் காட்சியகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Village Thorenoor". wikiedit.org. Retrieved 2016-10-17.
  2. "Thorenoor". gloriousindia.com. Retrieved 2016-10-17.
  3. "Megalithic burial site discovered at Thorenoor". deccanherald.com. 9 August 2016. Retrieved 2016-10-17.
  4. "Primary School". icbse.com. Retrieved 2016-10-17.
"https://tamilar.wiki/w/index.php?title=தோரெனூர்&oldid=409011" இலிருந்து மீள்விக்கப்பட்டது