நாகயலங்கா (Nagayalanka) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமம் மச்சிலிப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள நாகயலங்கா மண்டலத்தின் மண்டல தலைமையகம் ஆகும்.[1]

நாகயலங்கா
Nagayalanka


Dynamic map
நாகயலங்கா Nagayalanka is located in ஆந்திரப் பிரதேசம்
நாகயலங்கா Nagayalanka
நாகயலங்கா
Nagayalanka
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
நாகயலங்கா Nagayalanka is located in இந்தியா
நாகயலங்கா Nagayalanka
நாகயலங்கா
Nagayalanka
நாகயலங்கா
Nagayalanka (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°57′00″N 80°55′00″E / 15.9500°N 80.9167°E / 15.9500; 80.9167
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்கிருட்டிணா
மண்டலம்நாகயலங்கா
பரப்பளவு
 • மொத்தம்12.60 km2 (4.86 sq mi)
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2011)[2]
 • மொத்தம்9,321
 • அடர்த்தி740/km2 (1,900/sq mi)
மொழி
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
521 120
தொலைபேசிக் குறியீடு+91–08671
வாகனப் பதிவுஆபி 16

புவியியல்

15°57′00″N 80°55′00″E / 15.9500°N 80.9167°E / 15.9500; 80.9167.[3] என்ற அடையாள ஆள்கூறுகளில் நாகயலங்கா கிராமம் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரத்தில் (33 அடி) இக்கிராமம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாகயலங்கா கிராமத்தில் 9,321 மக்கள் இருந்தனர். இம்மொத்த மக்கள் தொகையில் 4,851 ஆண்களும் 4,470 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 922 பெண்கள் ஆகவும் 744 குழந்தைகள் 0–6 வயதுக்குட்பட்டவர்களும் இருந்தனர். இதில் 431 சிறுவர்கள் மற்றும் 313 பெண்கள் ஆவர். இதன் விகிதம் 1000 பேருக்கு 726 ஆகும். கிராமத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 83.56% ஆகும். கிராமத்து மக்கள் தொகையில் 7,167 பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். இது மாநில சராசரியான 67.41% என்பதை விட கணிசமாக அதிகமாகும்.[2][4]

பொருளாதாரம்

நாகயலங்கா கடற்கரைத் தொகுதியில் உள்ள எண்ணெய் கிணறு, கிருட்டிணா கோதாவரி படுகையின் மிகப்பெரிய எண்ணெய் வைப்புகளைக் கொண்டுள்ளது. இது தோராயமாக 480 மில்லியன் பீப்பாய்கள் (76 மில்லியன் கன மீட்டர்) எண்ணெய்க்கு சமமானதாகும்.[5][6]

ஆந்திரப் பிரதேச மாநில அரசு மற்றும் இந்திய நிதி அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன், நாகயலங்காவில் ஏவுகணை ஏவுதளத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதை நிறுவுவதற்கான மற்ற அனைத்து நடைமுறைகளும் 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் அன்று அங்கீகரிக்கப்பட்டன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "District Census Handbook - Krishna" (PDF). Census of India. p. 16,478. Retrieved 4 February 2016.
  2. 2.0 2.1 "Census 2011". The Registrar General & Census Commissioner, India. Retrieved 3 October 2014.
  3. "Maps, Weather, and Airports for Nagayalanka, India". fallingrain.com.
  4. "Literacy of AP (Census 2011)" (PDF). Official Portal of Andhra Pradesh Government. p. 43. Archived from the original (PDF) on 14 July 2014. Retrieved 3 October 2014.
  5. "Nagayalanka-SE-1 is the largest oil discovery in the onshore part of KG Basin till date". Cairn India Limited. Archived from the original on 6 June 2017. Retrieved 21 July 2015.
  6. "Cairn Energy notifies second oil discovery in KG Basin's Nagayalanka well". The Hindu Businessline (Hyderabad). 3 April 2012. http://www.thehindubusinessline.com/companies/cairn-energy-notifies-second-oil-discovery-in-kg-basins-nagayalanka-well/article3277758.ece. பார்த்த நாள்: 21 July 2015. 
"https://tamilar.wiki/w/index.php?title=நாகயலங்கா&oldid=412763" இலிருந்து மீள்விக்கப்பட்டது