நூருல் அமீன்
நூருல் அமீன் (Nurul Amin) இந்தியாவைச் சேர்ந்த ஒரு விளையாட்டு நிர்வாகி ஆவார்.[1][2] சட்டப் பட்டதாரியான இவர் 1975ஆம் ஆண்டு முதல் 1980ஆம் ஆண்டு வரை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.[3] முன்னர் இந்திய தேசிய கால்பந்து அணியில் விளையாடினார். 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற அணியின் மேலாளராகவும்,[4] அசாமில் உள்ள பல விளையாட்டு அமைப்புகளிலும், 1948ஆம் ஆண்டு முதல் 1956ஆம் ஆண்டு வரை அசாம் துடுப்பாட்ட சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார்.[5] founding president of the Assam Olympic Association,[6]அசாம் ஒலிம்பிக் சங்கத்தின் நிறுவனத் தலைவராகவும், நகாவன் விளையாட்டு சங்கத்தின் நிறுவன செயலாளராகவும் பணியாற்றினார்.[2] அசாமின் நாகாவனில் உள்ள நூருல் அமீன் விளையாட்டு அரங்கம் இவரது நினைவாக பெயரிடப்பட்டது.[7]
| நூருல் அமீன் Nurul Amin | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிறப்பு | 1919 அசாம் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | ||||||||||||||
| இறப்பு | 1991 | ||||||||||||||
| பணி | விளையாட்டு நிர்வாகி | ||||||||||||||
| |||||||||||||||
மேற்கோள்கள்
- ↑ "Sports Organizer Nurul Amin birth centenary begins in Nagaon". The Sentinel. 9 January 2019. Retrieved 21 April 2021.
- ↑ 2.0 2.1 "Sports organizers". Krirangan. Archived from the original on 10 January 2022. Retrieved 21 April 2021.
- ↑ Kapadia, Novy (23 June 2012). "A History of the All India Football Federation (AIFF)". www.sportskeeda.com.
- ↑ Chaudhuri, Arunava. "The Indian Senior Team at the 1962 D'Jakarta Asian Games". indianfootball.de. Retrieved 21 April 2021.
- ↑ "Presidents,Secretaries & Treasurers Since Inception". www.assamcricket.com.
- ↑ "History". Assam Olympic Association. Retrieved 21 April 2021.
- ↑ https://www.telegraphindia.com/north-east/nagaon-retain-hockey-title/cid/840942