நெலபாடு (Nelapadu) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமமாகும். [2] கிராம பஞ்சாயத்து என்ற நிலையிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, இது குண்டூர் மாவட்டத்தின் துள்ளூர் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமமாக இருந்தது.[1][3]

நெலபாடு
Nelapadu

கிராமம்
நெலபாடு Nelapadu is located in ஆந்திரப் பிரதேசம்
நெலபாடு Nelapadu
நெலபாடு
Nelapadu
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°30′37″N 80°28′50″E / 16.51028°N 80.48056°E / 16.51028; 80.48056
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம் (தாலுகா)துள்ளூர் மண்டலம்
பரப்பளவு
 • மொத்தம்8.09 km2 (3.12 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,028
 • அடர்த்தி130/km2 (330/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522 237
இந்தியாவில் தொலைபேசி எண்கள்+91–8645
வாகனப் பதிவுஆபி-07,

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெலபாடுவின் மக்கள் தொகை 1028 ஆக இருந்தது. இத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 494 ஆகவும் பெண்களின் எண்ணிக்கை 534 ஆகவும் இருந்தது. 300 குடும்பங்கள் இங்கு வசித்தன.

நெலபாடு கிராமத்தில் பகுதியில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 75 ஆகும். இது நெலபாடு கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 7.30% ஆகும். கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 1081 ஆகும். இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சராசரியான 993-என்பதை விட அதிகமாகும். இம்மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நெலபாடு குழந்தை பாலின விகிதம் 1344 ஆகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் சராசரியான 939-என்பதை விடக் அதிகமாகும்.

ஆந்திரப் பிரதேசத்துடன் ஒப்பிடும்போது நெலபாடு கிராமத்தில் எழுத்தறிவு விகிதம் குறைவாக இருந்தது. 2011 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேசத்தின் எழுத்தறிவு விகிதம் 67.02% ஆக இருந்தபோது, நெலபாடு கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 64.32% ஆக இருந்தது. நெலபாடுவில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 74.03% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 55.19% ஆகவும் இருந்தது.[4]

போக்குவரத்து

நெலபாடு துள்ளூர் மற்றும் குண்டூர் வழித்தடத்தில் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகள் குண்டூரிலிருந்து நெலபாடு வரை போக்குவரத்து சேவைகளை வழங்குகின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "District Census Handbook - Guntur" (PDF). Census of India. p. 14,258. Retrieved 27 December 2015.
  2. "New Andhra capital Amaravati to compete for Smart City tag". The New Indian Express. 25 May 2016 இம் மூலத்தில் இருந்து 26 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160526185229/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Andhra-capital-Amaravati-to-compete-for-Smart-City-tag/2016/05/25/article3450012.ece. பார்த்த நாள்: 6 June 2016. 
  3. "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 September 2015. Archived from the original (PDF) on 24 June 2016. Retrieved 21 February 2016.
  4. "Nelapadu Village Population - Thullur - Guntur, Andhra Pradesh". www.census2011.co.in. Retrieved 2026-01-07.
"https://tamilar.wiki/w/index.php?title=நெலபாடு&oldid=419141" இலிருந்து மீள்விக்கப்பட்டது