பண்ணைவிளை (Pannaivilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் தாலுக்கா பெருங்குளம் கிராமத்தில் அடங்கிய ஒரு குக்கிராமம் ஆகும்.[1] பனைமரங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய கிராமம் என்றும் இக்கிராமம் அறியப்படுகிறது. பனைவிளை என்ற பெயர் பண்ணை மற்றும் விளை என்ற இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது, இதன் பொருள் "வளரும் நிலம்" அல்லது "பனை மரங்கள் உள்ள நிலம்" என்பதாகும்.

பண்ணைவிளை
Pannaivilai
கிராமம்
பண்ணைவிளை Pannaivilai is located in தமிழ்நாடு
பண்ணைவிளை Pannaivilai
பண்ணைவிளை
Pannaivilai
இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைவிடம்
பண்ணைவிளை Pannaivilai is located in இந்தியா
பண்ணைவிளை Pannaivilai
பண்ணைவிளை
Pannaivilai
பண்ணைவிளை
Pannaivilai (இந்தியா)
ஆள்கூறுகள்: 8°39′10″N 78°00′03″E / 8.652878°N 78.000909°E / 8.652878; 78.000909
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மக்கள்தொகை
 • மொத்தம்2,500
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
628751
தொலைபேசிக் குறியீடு91-4630
வாகனப் பதிவுதநா92
ஏரல்ஏரல்
திருவைகுண்டம்தூத்துக்குடி
தூத்துக்குடிசிறீவைகுண்டம்
தட்பவெப்பம்இந்தியாவின் தட்பவெப்ப நிலை (கோப்பென் காலநிலை வகைப்பாடு)
இணையதளம்www.pannaivilai.org

புவியியல்

தூத்துக்குடி மாவட்டத்தின் ஏரல் அருகே பண்ணைவிளை அமைந்துள்ளது.[2] வடக்குப் பக்கத்தில் 'பெருங்குளம்' என்ற பெரிய குளத்தால் சூழப்பட்டுள்ளது.

மக்கள் தொகையியல்

கிராமத்தில் உள்ள அனைவரும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கிறித்தவமே முக்கிய மதமாகப் பின்பற்றப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்கள் திருநெல்வேலி (47 கி.மீ) மற்றும் தூத்துக்குடி (45 கி.மீ) ஆகும். அருகிலுள்ள இரயில் நிலையங்கள் நாசரேத்து (25 கி.மீ) மற்றும் குரும்பூர் (13 கி.மீ) ஆகும். அருகிலுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையம் தூத்துக்குடியில் (30 கி.மீ) அமைந்துள்ளது. வாகைகுளம் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும். இது 14 கி.மீ. தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "பண்ணைவிளை பள்ளி அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/Dec/18/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-804207.html. பார்த்த நாள்: 14 February 2025. 
  2. தினத்தந்தி (2023-01-24). "பண்ணைவிளையில்உபவாச ஜெப கூட்டம்". www.dailythanthi.com. Retrieved 2025-02-14.
"https://tamilar.wiki/w/index.php?title=பண்ணைவிளை&oldid=423171" இலிருந்து மீள்விக்கப்பட்டது