பாசைட்டு
பாசைட்டு (Fassaite) Ca(Mg,Fe,Al)(Si,Al)2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[2]ஆகைட்டு கனிமத்தின் ஒரு வகையாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. ஆகைட்டு கனிமத்துடன் ஒப்பிடுகையில் பாசைட்டு கனிமத்தில் இரும்பின் அளவு குறைவாக இருக்கும். இத்தாலி நாட்டின் பாசா பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டதால் பாசைட்டு எனப் பெயரிடப்பட்டது.
| பாசைட்டு Fassaite | |
|---|---|
| படிமம்:Fassaïte.jpg வால் டி பாசாவில் கிடைத்த பாசைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | கனிமம் |
| வேதி வாய்பாடு | Ca(Mg,Fe,Al)(Si,Al)2O6 |
| இனங்காணல் | |
| நிறம் | இலேசான -அடர் பச்சை, கருப்பு |
| படிக இயல்பு | பட்டகம், சமதளம் |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| மோவின் அளவுகோல் வலிமை | 6 |
| கீற்றுவண்ணம் | பசுமை வெண்மை |
| ஒப்படர்த்தி | 2.9-3.3 |
| மேற்கோள்கள் | [1] |
எரிமலை பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களுக்கு இடையிலான இடைமுகத்தில் அதிக வெப்பநிலையில் உருவாகும் ஒரு தொடர்பு கனிமமாக பாசைட்டு கனிமம் கருதப்படுகிறது. விண்கற்களில் இருப்பதாகவும் பதிவாகியுள்ளது.[3]
மேற்கோள்கள்
- ↑ Dowty, E.; Clark, J.R. (1973). "Crystal structure refinement and optical properties of a Ti3+ fassaite from the Allende Meteorite". American Mineralogist 58: 230–242. Bibcode: 1973AmMin..58..230D. https://pubs.geoscienceworld.org/msa/ammin/article-abstract/58/3-4_Part_1/230/542780. பார்த்த நாள்: 30 December 2020.
- ↑ Mindat
- ↑ Simon, S. B. and L. Grossman, A comparative study of melilite and fassaite in Types B1 and B2 refractory inclusions, Geochimica et Cosmochimica Acta 70 (2006) 780–798
- Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. ISBN 3-405-14003-X.