கூழ்ம இழையம் (Parenchyma) (/pəˈrɛŋkɪmə/)[1][2] அல்லது செயலிழையம் என்பது விலங்கின் உறுப்பிலோ புற்றுக் கட்டமைப்பிலமுள்ள பெரும்பகுதியாக உள்ள செயலாற்றும் இழையவகையாகும். விலங்கியலில் இது தட்டைப்புழுக்களின் உள்ளகத்தை நிரப்பும் இழையமாகும்.[3]

துணையிழை புல்லேவால் பேரளவு சிதைவுற்ற நுரையீரல் கூழ்ம இழையம்( bullae).
சிதறிய சிரை(கருஞ்சிவப்பு) அமைந்த தாவர இழையத்தின் கூழ்ம இழையம்(வெளிர்சாம்பல்)

இதன் கலச்சுவர் செல்லுலோசினால் ஆனது. இது கோள வடிவம், உருளை வடிவம், முட்டை வடிவம், உடு வடிவம், பல கோண வடிவம் ஆகிய வடிவங்களைக் கொண்டிருக்கும்.

சொற்பிறப்பியல்

பாரென்கைமா (parenchyma) என்பது இலத்தீனச் சொல்லாகும். இது பண்டையக் கிரேக்கச் சொல்லாகிய, ஊனிழையம் எனப் பொருள்படும், παρέγχυμα எனும் சொல்லில் இருந்து உருவானதாகும். இது உள்வை எனப்பொருள்படும் παρεγχεῖν (parenkhein) என்றசொல்வழி உருவாக்கப்பட்டது. இங்கே παρα-(para-) என்றால் பக்கம் ஆகும். மேலும், ἐν (en-) என்றால், உள் ஆகும். εῖν(khein) என்றால் வை அல்லது இடு ஆகும்'.[4]

மேற்கோள்கள்

  1. [Merriam-Webster Dictionary] Parenchyma
  2. "Parenchyma".. Oxford University Press. 
  3. "Parenchyma". Retrieved 30 December 2014.
  4. LeMone, Priscilla; Burke, Karen; Dwyer, Trudy; Levett-Jones, Tracy; Moxham, Lorna; Reid-Searl, Kerry; Berry, Kamaree; Carville, Keryln; Hales, Majella; Knox, Nicole; Luxford, Yoni; Raymond, Debra (2013). "Parenchyma". Medical-Surgical Nursing. Pearson Australia. p. G–18. ISBN 978-1-4860-1440-8. Archived from the original on 2015-11-30. Retrieved 2015-05-21.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாரன்கைமா&oldid=431359" இலிருந்து மீள்விக்கப்பட்டது