பால்குன்' (Falgun) என்பது பெங்காலி நாட்காட்டி, [1] அசாமிய நாட்காட்டி, [2] மற்றும் நேபாளி நாட்காட்டியின்படி ஆண்டின் பதினொன்றாவது மாதமாகும்.[3] இது, அசாம் மாநிலத்தில் பாகுன் எனவும் கூறப்படுகிறது. வங்காளதேசத்தில் அக்டோபர் 2019 முதல் பயன்படுத்தப்படும் பெங்காலி நாட்காட்டியின் திருத்தத்தில், கிரெகொரியின் நாட்காட்டியின்படி இந்த மாதம் சாதாரண ஆண்டுகளில் 29 நாட்களும் அல்லது நெட்டாண்டுகளில் 30 நாட்களும் இருக்கும். வங்கதேசத்தில் 1987 முதல் அக்டோபர் 2019 வரை பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியின் முந்தைய பதிப்பில், பால்குன் மாதத்திற்கு சாதாரண ஆண்டுகளில் 30 நாட்கள் அல்லது நெட்டாண்டுகளில் 31 நாட்கள் இருந்தன.[4] பொதுவாக, இந்த மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டுள்ளது. சூரியனின் உண்மையான இயக்கங்களின் அடிப்படையில், பழைய சீர்திருத்தப்படாத வங்காள நாட்காட்டியில், மேற்கு வங்காளத்திலும்,[1] மற்றும் நேபாளி நாட்காட்டியிலும் இன்னும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.[5]

பால்குன்
பால்கனின் முதல் நாள், வங்காளதேசத்தில் வசந்த காலத்தின் ஆரம்பக் கொண்டாட்டம்
பூர்வீகப் பெயர்ফাল্গুন (வங்காளம்)
நாட்காட்டி
  • வங்காள நட்காட்டி
மாத எண்
  • 11
நாட்களின் எண்ணிக்கை29/30
பருவ காலம்வசந்த காலம்
கிரெகொரியின் இணைபிப்ரவரி–மார்ச்
குறிப்பிடத்தக்க நாட்கள்சித்திரை 30 – சித்திரை சங்கராந்தி
← மாசி
சித்திரை →

பால்குன் நட்சத்திரம் (சந்திர மாளிகை) உத்தர பால்குனியின் பெயரால் பெயரிடப்பட்டது. அப்போது ஆண்டின் அந்த நேரத்தில் முழு நிலவு தோன்றும்.[6] இது வங்காளதேசம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் நேபாளத்தில் ஆறாவது மற்றும் இறுதி பருவமான வசந்த காலத்தின் வருகையைக் குறிக்கிறது.[1] கிரெகொரியன் நாட்காட்டியில் பால்குன் பிப்ரவரி நடுப்பகுதிக்கும் மார்ச் நடுப்பகுதிக்கும் இடையில் வருகிறது.[7]

பால்குன் மாதத்தின் முக்கிய தினங்கள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 Gyllenbok, Jan (2018). Encyclopaedia of Historical Metrology, Weights, and Measures. Vol. 1. Birkhäuser. pp. 260–261. ISBN 978-3-319-57596-4.
  2. Gyllenbok, Jan (2018). Encyclopaedia of Historical Metrology, Weights, and Measures. Vol. 1. Birkhäuser. ISBN 978-3-319-57596-4.
  3. Crump, William D. (2014). Encyclopedia of New Year's Holidays Worldwide. McFarland. ISBN 978-1-4766-0748-1.
  4. Chakrabarti, Kunal (2013). Historical dictionary of the Bengalis. Scarecrow Press. pp. 114–115. ISBN 978-0-8108-5334-8.
  5. Crump, William D. (2014). Encyclopedia of New Year's Holidays Worldwide. McFarland. pp. 26–27. ISBN 978-1-4766-0748-1.
  6. Jones, Howard D. (2018). "Historical Note: The Origin of the 28 Nakṣatras in Early Indian Astronomy and Astrology". Indian Journal of History of Science 53 (3): 319. doi:10.16943/ijhs/2018/v53i3/49463. 
  7. Nicholas, Ralph W. (2003). Fruits of Worship: Practical Religion in Bengal. New Delhi: Chronicle Books. p. 27. ISBN 978-81-8028-006-1.
  8. "Pahela Falgun brings colour in life". The Daily Star. UNB. 13 February 2018. https://www.thedailystar.net/country/spring-celebrating-pahela-falgun-2018-brings-colour-in-life-1534075. 
  9. "Two Tundikhel events". Nepali Times. 19 February 2021. https://www.nepalitimes.com/banner/two-tundikhel-events/. 
  10. "Bangladesh reworks Bangla calendar to match national days with West". bdnews24.com. 17 October 2019. https://bdnews24.com/lifestyle/2019/10/17/bangladesh-reworks-bangla-calendar-to-match-national-days-with-west. 
  11. Graner, Elvira (July 2006). "Education in Nepal: Meeting or Missing the Millennium Development Goals?". Contributions to Nepalese Studies 33 (2): 153. https://link.gale.com/apps/doc/A168162612/AONE?u=anon~9a6a79e2&sid=googleScholar&xid=6b37ac8d. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Nepal celebrates Mahashivaratri festival". Xinhua News Agency. 20 February 2012. https://link.gale.com/apps/doc/A280531527/ITOF?u=wikipedia&sid=bookmark-ITOF&xid=e12d0a78. 
  13. The Folklore of World Holidays.
"https://tamilar.wiki/w/index.php?title=பால்குன்&oldid=432840" இலிருந்து மீள்விக்கப்பட்டது