பிரசுதி (ஆங்கிலம்: Prasuti; இந்தி: प्रसूति) என்பவர் தக்கனின் மனைவி ஆவார். இவருக்குச் சதி உட்பட இவருக்குப் பல மகள்கள் உள்ளனர். பிரசுதி சுவயம்புவ மனு மற்றும் சதரூபாவின் மகள் ஆவார்.[1]

பிரசுதி
படிமம்:Daksha-Prajapati.jpg
தக்கனும் பிரசுதியும்
துணைதக்கன்
குழந்தைகள்27 மகள்கள்

திருமணமும் குழந்தைகளும்

விஷ்ணு புராணம், லிங்க புராணம் மற்றும் பத்ம புராணத்தின் படி, தக்கனும் அவரது மனைவி பிறசுதிக்குப் பல மகள்கள் இருந்தனர் (16 முதல் 60 வரை). ஆனால் பெரும்பாலான அறிஞர்கள் இந்த எண்ணிக்கையினை 24 என்று கருதுகின்றனர். இவை: சரத்தா, பக்தி, திரிதி, துசுடி, புசுடி, மேதா, கிரியா, புத்திகா, சித்திகா, சந்தீகா, சந்திகா, கியாதி, சுமிருதி, பிரீதி, சாமா, சன்னதி, ஊர்ஜ்ஜா, சுவாகா, சுவதா, சதி. பத்ம புராணம், தக்கன் தனக்கு 24 மகள்கள் போதாது என்று உணர்ந்து 60க்கும் மேற்பட்ட கன்னிப் பெண்களைப் பெற்றெடுத்ததாகப் பதிவு சொல்கிறது. இருப்பினும் இந்த அறுபது மகள்கள் மற்ற நூல்களில் அசிக்னியின் சந்ததியினர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.[2]

மேற்கோள்கள்

  1. Dalal, Roshen (2010). Hinduism: An Alphabetical Guide (in ஆங்கிலம்). Penguin Books India. ISBN 978-0-14-341421-6.
  2. Wilkins, W.J. (2003). Hindu Mythology. New Delhi: D.K. Printworld (P) Limited. p. 373. ISBN 81-246-0234-4.
"https://tamilar.wiki/w/index.php?title=பிரசுதி&oldid=436812" இலிருந்து மீள்விக்கப்பட்டது