பீற்றா
பீற்றா (Beta, கிரேக்கம்: βήτα) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது இரண்டு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான பெத்திலிருந்தே (Beth) பீற்றா பெறப்பட்டது. பீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் இலத்தீன் எழுத்து B, சிரில்லிய எழுத்துகள் Б, B என்பனவாகும்.
| படிமம்:Beta uc lc.svg | |||
| கிரேக்க நெடுங்கணக்கு | |||
|---|---|---|---|
| Αα | அல்ஃபா | Νν | நியூ |
| Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
| Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
| Δδ | தெலுத்தா | Ππ | பை |
| Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
| Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
| Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
| Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
| Ιι | அயோற்றா | Φφ | வை |
| Κκ | காப்பா | Χχ | கை |
| Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
| Μμ | மியூ | Ωω | ஒமேகா |
| அநாதையாய் | |||
| Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
| Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
| Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
| Ϻϻ | சான் | ||
பயன்பாடுகள்
அச்சுக் கலை
அச்சுப் பதிப்பின்போது சில வேளைகளில் செருமானிய எழுத்தான ß பீற்றாவுக்குப் பதிலாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
அறிவியல்
அறிவியலில் பீற்றாத் துகள், பீற்றாச் சிதைவு முதலிய சொற்களில் பீற்றா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
பீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[3]
தொழினுட்பக் குறிப்புகள்
| விளக்கம் | வரியுரு | ஒருங்குறி | மீப்பாடக் குறிமொழி |
|---|---|---|---|
| கிரேக்கப் பேரெழுத்துப் பீற்றா | Β | U+0392 | Β Β |
| கிரேக்கச் சிற்றெழுத்துப் பீற்றா | β | U+03B2 | β β |
| கிரேக்கப் பீற்றாக் குறியீடு | ϐ | U+03D0 | ϐ |
மேற்கோள்கள்
- ↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
- ↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-21. Retrieved 2012-04-25. பீற்றாப் புயல் அக்டோபர் 26-31 2005 (ஆங்கில மொழியில்)]