புதுவை - 1 (PY 1), வேளாண் வழக்கு; புதுவைப் பொன்னி (Puduvai Ponni) எனப்படும் இந்த நெல் வகை, பொன்னி மற்றும் பன்னாட்டு நெல் - 8 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட புதுச்சேரி நெல் வகையாகும்.[1]

புதுவை - 1
PY 1
வேளாண் பெயர்
புதுவைப் பொன்னி
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பொன்னி X பன்னாட்டு நெல் - 8
வகை
புதிய நெல் வகை
காலம்
130 - 135 நாட்கள்
மகசூல்
5,500 கிலோ எக்டேர்
வெளியீடு
1985
வெளியீட்டு நிறுவனம்
புதுவை வேளாண் அறிவியல் நிலையம்
மாநிலம்
புதுச்சேரி
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் வேளாண் அறிவியல் நிலையம், 1985 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2] வேறொரு மூலத்தில், 1979 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.[3]

காலம்

மத்தியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது.[1] இதுபோன்ற மத்தியகால நெற்பயிர்கள், பின் சம்பா பட்டத்திற்கு (பருவத்திற்கு) ஏற்றதாக கூறப்படுகிறது.[4][5]

சாகுபடி

உப்பு நிலத்தில் சகித்து வளரக்கூடிய இந்த நெல் வகை,[4] இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரி, மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[1]

  • இந்த நெல் இரகம், ஒரு எக்டேருக்கு 5500 கிலோவரை மகசூல் தரக்கூடியது.[4]
  • இவ்வகையின் அரிசி சன்ன (மெல்லிய) இரகமாக காணப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "PY 1". www.rkmp.co.in (ஆங்கிலம்). 2011. Archived from the original on 2014-08-10. Retrieved 2018-06-27.
  2. "Indian Rice Varietal InformationPaduvai Ponni-1 (Py-1)". rice-garud.icar-web.com (ஆங்கிலம்). 2018. Retrieved 2025-09-28.
  3. PUDUCHERRY P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released: PY-l (Puduvai Ponni)
  4. 4.0 4.1 4.2 "P.K. Krishi Vigyan Kendra Puducherry - Varieties developed and released:" (PDF). www.icar-iirr.org (ஆங்கிலம்). 2018. Retrieved 2018-06-28.
  5. "Variety PY1". btistnau.in (ஆங்கிலம்). 2018. Archived from the original on 2020-08-08. Retrieved 2018-07-03.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=புதுவை_-_1&oldid=442427" இலிருந்து மீள்விக்கப்பட்டது