பெருநாழி (ஆங்கிலம்:Perunazhi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம். பரமக்குடி வருவாய் வட்டத்தின் 42 ஆவது எண்கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:42) ஆகும்.[4][5]

பெருநாழி
—  கிராமம்  —
பெருநாழி
அமைவிடம்: பெருநாழி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°14′11″N 78°19′08″E / 9.236400°N 78.3187701°E / 9.236400; 78.3187701
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராமநாதபுரம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்சித் சிங் காலோன், இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாஆத்திமுத்து
மக்கள் தொகை

அடர்த்தி

3,294 (2001)

978/km2 (2,533/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெயர்காரணம்

 
அளவைக்கருவிகளுள் ஒன்றான உழக்கு
படிமம்:Padi in India.jpg
முகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படி அல்லது நாழி

தமிழர்கள் நெல், தானியங்களை அளவீடு செய்வதற்காக உழக்கு படி, நாழி (படங்கள்), மரக்கால், என அளவைக் கருவிகளைப் பயன்படுத்தினார்கள். இந்தப்பகுதியில் பயன்பாட்டிலிருந்த படி, நாழி பெரியதாக இருந்தமையால் இவ்வூருக்கு பெருநாழி என குறிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பயிர்

இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வறட்சி மாவட்டம் என்பதால் இங்கு சீமைக் கருவேல மரம் (விறகுகளால் தயாரிக்கப்படும் அடுப்புக்கரி தயாரிக்கும் பொருட்டு) முகனையாக வளர்க்கப்படுகிறது.

அமைவிடம்

அருப்புக்கோட்டையலிருந்து சாயல்குடி செல்லும் வழியில் சுமார் 39 கி.மீ தூரத்திலும், கமுதியிலிருந்து சுமார் 29 கி.மீ.தூரத்திலும், சாயல்குடியில் இருந்து 17 கி.மீ.தூரத்திலும் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 305 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெருநாழி கிராமத்தில் 3294 பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 1665,பெண்கள்1629 பாலின விகிதம் 978. எழுத்தறிவு பெற்றவர்கள் 2468 பேர். இதில் 1376 பேர் ஆண்கள்;1092 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 83.6% ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 342 ஆண் குழந்தைகள் 187,பெண் குழந்தைகள் 155 ஆவர்.[6]

நிர்வாக அலகு

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-10-30.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-10-30.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர்28, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பெருநாழி&oldid=449129" இலிருந்து மீள்விக்கப்பட்டது