பைரோ பாருசி
பைரோ பாருசி (Piero Barucci, 29 சூன் 1933 –26 பெப்ரவரி 2026) என்பவர் இத்தாலியக் கல்வியாளரும், பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியும் ஆவார். 1992 முதல் 1994 வரை இத்தாலியின் கருவூல அமைச்சராகப் பணியாற்றினார்.
தொடக்க வாழ்க்கையும், கல்வியும்
பாருசி 1933 சூன் 29 அன்று புளோரன்சில் பிறந்தார்.[1] இவர் புளோரன்சு பல்கலைக்கழகத்தில் பொருளாதார இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
பாருசி 1966 முதல் 1990 வரை சியானா பல்கலைக்கழகத்திலும், அவர் கல்வி பயின்ற புளோரன்சு பல்கலைக்கழகத்திலும், அரசியல் பொருளாதாரம், பொருளாதார வரலாறு ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2] 1981 முதல் 1983 வரை புளோரன்சு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், வணிகவியல் ஆகியவற்றில் துறைத்தலைவராக இருந்தார்.[2] 1983 முதல் 1990 வரை மாண்டே டெய் பாஸ்சி டி சியானா, இத்தாலிய இண்டர்நேசனல் பேங்க் ஆஃப் இலண்டன் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.[3][4]
பாருசி 1992 சூன் மாதத்திலிருந்து, 1993 ஏப்ரல் மாதம் வரை குய்லானோ அமதோவின் முதலாவது அமைச்சரவையில் கருவூலம் மற்றும் குடிமைப் பணி அமைச்சராகப் பணியாற்றினார்.[5] முதலாவது அமைச்சரவையில் குய்தோ கார்லிக்குப் பின் பாருசி வெற்றி பெற்றார்.[6] பின்னர் இவர் கார்லோ சியாம்பி அமைச்சரவையில் கருவூல அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7] 1993 ஏப்ரல் முதல் 1994 ஏப்ரல் வரை இப்பதவியில் இருந்தார்.[8] பொது பணிகளை விட்டு வெளியேறிய பின்னர், தனியார் வங்கிகள் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றத் தொடங்கினார். 1998-இல் பாங்கோ எமிலியானோ ரோமக்னோலோ என்ற தனியார் வங்கியை நிறுவினார். இந்த வங்கியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[9] 2001-இல், இத்தாலியக் காற்பந்துக் கழகப் பியோரெண்டினாவை, சேச்சிக் கோரி குழுவிடமிருந்து கைப்பற்றி, அதன் வணிகர்களின் கூட்டமைப்பை வழிநடத்தினார்.[9] கூடுதலாக, 2005 மே மாதம் பாங்கா இலியோனார்டோவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[10][9] 2007 மே 7 அன்று போட்டி ஆணையத்தில் ஆணையராகப் பணியாற்றத் தொடங்கினார்.[2]
இறப்பு
பாருசி 2026 பெப்ரவரி 26 அன்று தனது 92-ஆவது அகவையில் காலமானார்.[11]
விருதுகள்
2000 ஆம் ஆண்டில், பாருசி தனது சிறப்பான சாதனைகளுக்காக தோவிசோ பரிசு பெற்றார். [4]
மேற்கோள்கள்
- ↑ "Biography of Speakers" (PDF). MEDPA. 2010. Retrieved 26 April 2013.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Commissioner". AGCM. Retrieved 26 April 2013.
- ↑ Mary Beth Sheridan (28 June 1998). "Amato patches together Italy's 51st postwar government". Associated Press. https://apnews.com/af39c67a26deb09c38b2ee0d105c9063.
- ↑ 4.0 4.1 "Dovizi Prizs". Premio Dovizi. Archived from the original on 5 March 2016. Retrieved 18 July 2013.
- ↑ Clough, Patricia (29 April 1993). "Ex-Communists join Italy's reform government". The Independent (Rome). https://www.independent.co.uk/news/world/europe/excommunists-join-italys-reform-government-the-nonpolitical-prime-minister-puts-together-a-mouldbreaking-cabinet-1458094.html.
- ↑ "New faces". The Wall Street Journal இம் மூலத்தில் இருந்து 4 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140104212541/http://search.oecd.org/officialdocuments/displaydocumentpdf/?cote=SG/PRB/D(92)118&docLanguage=bi.
- ↑ "Italian PM includes ex-Reds in Cabinet". New Straits Times. 30 April 1993. https://news.google.com/newspapers?nid=1309&dat=19930430&id=puBOAAAAIBAJ&sjid=-xMEAAAAIBAJ&pg=3558,4292745.
- ↑ Richard L. Wentworth (28 April 1993). "Italy Turns to a Banker to Form Government". The Christian Science Monitor. https://www.csmonitor.com/1993/0428/28071.html.
- ↑ 9.0 9.1 9.2 Jonathan Sibun (1 May 2006). "Investment banking: Braggiotti lines up big hitters". Financial Times. http://www.efinancialnews.com/story/2006-05-01/investment-banking-braggiotti-lines-up-big-hitters.
- ↑ "Italian Private Bank Targeted by Top Investment Banker backed by Agnelli Money". Wealth Briefing. 21 November 2005. http://wealthbriefing.com/html/article.php?title=Italian_Private_Bank_Targeted_by_Top_Investment_Banker_backed_by_Agnelli_Money&id=2720. பார்த்த நாள்: 26 April 2013.
- ↑ Morto l’economista Piero Barucci: già ministro e presidente di Mps, aveva 92 anni (in இத்தாலியம்)