பை-ராமேசஸ்
பை-ராமேசஸ் (Pi-Ramesses) என்பதற்கு எகிப்திய மொழியில் ராமேசேசியர்களின் வீடு எனப்பொருள்படும். [1] பத்தொன்பதாம் வம்சத்தின் புது எகிப்து இராச்சியத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசஸ் (கிமு 1279–1213), கீழ் எகிப்தின் நைல் நதி வடிநிலத்தில் ஆவரிஸ் நகரத்திற்கு அருகில் இப்புது நகரத்தை நிறுவி அதனை தனது தலைநகராகக் கொண்டார். எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலத்தின் போது கிமு 1060-இல் பை-ராமேசஸ் நகரம் முற்றிலும் அழிந்து போனது.
| பை-ராமேசஸ் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பை-ராமேசஸ் நகரத்தில் புது எகிப்து இராச்சியத்தின் பத்தொன்பதாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் ராமேசசின் கால் சிற்பம் | |
| இருப்பிடம் | குவாந்தீர், அல் சர்கியா ஆளுநகரம், எகிப்து |
| பகுதி | கீழ் எகிப்து |
| ஆயத்தொலைகள் | 30°47′56″N 31°50′9″E / 30.79889°N 31.83583°E |
| வகை | குடியிருப்பு |
| பரப்பளவு | 18 km2 (6.9 sq mi) |
| வரலாறு | |
| கட்டுநர் | இரண்டாம் ராமேசஸ் |
| கட்டப்பட்டது | கிமு 13-ஆம் நூற்றாண்டு |
| பயனற்றுப்போனது | கிமு 1060 |
| காலம் | புது எகிப்து இராச்சியம், எகிப்தின் மூன்றாம் இடைநிலைக் காலம் |
பை-ராமேசஸ் நகரம் எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் மற்றும் இருபதாம் வம்சத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது. இப்பண்டைய நகரம் கெய்ரோவிற்கு வடகிழக்கே 62 மைல் தொலைவில் உள்ளது. [2]
பண்டைய எகிப்திய நகரங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Tyldesley, Joyce (October 30, 2001). Ramesses: Egypt's Greatest Pharaoh. Penguin. p. 90. ISBN 978-0-14-028097-5.
- ↑ Per Ramessu - ANCIENT CITY, EGYPT