போலன் கணவாய் பாக்கிஸ்தானின் பலுச்சிஸ்த்தான் மாகாணத்தில் தோபா காக்கர் மலைத்தொடரில் அமைந்த கணவாய் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1,793.4 மீட்டர் (5,884 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.இது பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தானையும், ஆப்கானின் காந்தகாரையும் இணைக்கிறது. இது ஆப்கன் எல்லையில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தெற்காசியாவிற்குள் நுழைவதற்கு இதுவும் கைபர் கணவாயும் தான் வழியாகும்.

போலன் கணவாய்
படிமம்:Mad max fury Balochistan.jpg
போலான் கணவாய் வழியாகச் செல்லும் இருப்புப்பாதை
ஏற்றம்1,793.4 மீ (5,884 அடி)
Traversed byபடிமம்:Pakistan N-65.svg தேசிய நெடுஞ்சாலை:[1] ரோகிரி-சாமன் இருப்புப்பாதை
அமைவிடம்சிபி மாவட்டம் பலுசிஸ்தான் மாகாணம், பாக்கிஸ்தான்
மலைத் தொடர்தோபா காக்கர் மலைத்தொடர்
ஆள்கூறுகள்29°27′13″N 67°29′41″E / 29.453516°N 67.494648°E / 29.453516; 67.494648
பாகிஸ்தானில் போலன் கணவாயின் அமைவிடம்
போலன் கணவாய் (Balochistan, Pakistan)

இந்தியத் துணைக் கண்டத்தில் (சுதந்திரத்துக்கு முன்) உள்ள முக்கிய கணவாய்களில் ஒன்று.[2][3][4]1880-களில் இங்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டது.

பிராகுயி மொழி மற்றும் பலூச்சி மொழி பேசும் இன மக்கள் இப்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்களுள் வைத்திருந்தனர். இம்மக்கள் இன்றளவும் பாக்கித்தானின் பலுச்சிஸ்த்தான் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். பிராகுயி மக்கள் பிராகுயி மொழி என்னும் திராவிட மொழி பேசும் இனத்தவர்.

புவியியல்

The Bolan Pass runs between Rindli (Dhadar) and Darwaza (Kolpur)

போலன் கணவாய் கடல் மட்டத்திலிருந்து 1,793.4 மீட்டர் (5,884 அடி) உயரத்தில் தோபா காக்கர் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. PAK: Multitranche Financing Facility for the National Highway Development Sector Investment Program, Project 2 (MFF0002) (PDF) (in ஆங்கிலம்). Prepared by Government of Pakistan for the Asian Development Bank (ADB). April 2009. p. 5 (6).
  2. PAK: Multitranche Financing Facility for the National Highway Development Sector Investment Program, Project 2 (MFF0002) (PDF) (in ஆங்கிலம்). Prepared by Government of Pakistan for the Asian Development Bank (ADB). April 2009. p. 5 (6).
  3. Bolān Pass, Encyclopædia Britannica 4 October 2014.
  4. Singh, Sarina (2004). Pakistan & the Karakoram Highway (6th ed.). Lonely Planet. p. 112. ISBN 978-0-86442-709-0.
"https://tamilar.wiki/w/index.php?title=போலன்_கணவாய்&oldid=454231" இலிருந்து மீள்விக்கப்பட்டது