போலுப்பள்ளி
போலுப்பள்ளி ( Polupalli ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
போலுப்பள்ளி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,639 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635115 |
மக்கள் வகைப்பாடு
வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊரானது கிருட்டிணகிரியில் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 626 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 2639 ஆகும். இதில் 1318 பேர் ஆண்கள், 1321 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 59.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
இந்தக் கிராமத்தில் தமிழக அரசின் வனவியல் விரிவாக்க மையம் ஒன்று உள்ளது. போலுப்பள்ளியியல் அரசு மருத்துவக் கல்லூரியைத் துவக்க தமிழ்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு 2020 மார்ச் 4 அன்று தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.[3]