மங்கொம்பு - 13 (MO 13 - Pavithra) முன்மொழிவு எண்: (IET - 13983) [1]எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[2] மங்கொம்பு - 5 மற்றும் Surekha ஆகிய நெல் இரகங்களை பரம்பரைத் தேர்வு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[3] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1998 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை,[4] பவித்ரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[3]

மங்கொம்பு - 13
MO 13 - Pavithra
வேளாண் பெயர்
பவித்ரா (Pavithra)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
மங்கொம்பு - 5 X Surekha
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
வெளியீடு
1998
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது.[5] இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் உறை கருகல், உறை அழுகல், பழுப்பு நிறத் தத்துப்பூச்சி (BPH), மற்றும் மரபணு மாற்றுப் பயிர் (GM) உயிரியல் வகை-5 (Biotype-5)க்கு தாங்கும் தன்மை கொண்ட, குள்ள நெல் இரகமாகும்.[6]

சான்றுகள்

  1. Indian Rice Varietal Information Name of Variety Pavithra (MO-13) (IET-13983)
  2. Paddy varieties of Kerala - Pavithra (MO 13)
  3. 3.0 3.1 "Varieties Released - MO 13-Pavithra". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-09-01.
  4. Varieties released/ identified MO.13 Pavithra 1998
  5. Kerala Agricultural University (KAU) Medium Duration - Pavithra (MO-13)
  6. "Rice Variety information Kole lands Medium duration Pavithra (MO-13):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-09-01.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_13&oldid=456440" இலிருந்து மீள்விக்கப்பட்டது