மங்கொம்பு - 4 (MO 4 - Bhadra) எனப்படும் இந்த நெல் வகை, IR 8 மற்றும் PTB 20 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, பத்ரா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

மங்கொம்பு - 4
MO 4 - Bhadra
வேளாண் பெயர்
பத்ரா (Bhadra)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
IR 8 X PTB 20
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
மகசூல்
எக்டேருக்கு
சுமார் 4000 - 4500 கிலோ
வெளியீடு
1978
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியில் புஞ்சா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு குறைந்த பாதிப்பும், பழுப்பு நிறத் தத்துப்பூச்சியை தாங்கும் தன்மை கொண்டது.[2] நல்ல தானிய தர பண்புகளைக் கொண்ட, அதிக மகசூல் தரும் வகையை உருவாக்குவதற்காக, 1967 - 68 ஆம் ஆண்டில் மங்கொம்பு நெல் ஆராய்ச்சி நிலையம், IR - 8 மற்றும் PTB - 20 ஆகியவை கலப்பினப்படுத்தப்பட்டன. மேலும் இது M-11-57-5-1 என்ற வளர்ப்பு முறையில் மேற்கண்ட கலப்பினத்தின் வழித்தோன்றலாகும். மேலும் மாநிலத்தின் பல்வேறு வெளியீட்டுக் குழுவால் "பத்ரா" (M 04) என்ற பெயரில் 'வகையாக' வெளியிடப்பட்டது.[3]

மகசூல்

நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 120 – 125 (கூடுதல் மகசூலுக்கு 125 – 135) நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படும் இந்நெல் இரகம், ஒரு எக்டேருக்கு சுமார் 4000 - 4500 கிலோ வரை மகசூல் தருவதாக கூறப்படுகிறது.[4] மேலும் குறுகிய தடித்த, இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[5]

சான்றுகள்

  1. 1.0 1.1 "Bhavathi (BPT 2782)". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-25.
  2. "Bhadra (MO 4) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-25.
  3. "Bhadra (MO 4) A high yielding dwarf rice variety for Kuttanad". krishikosh.egranth.ac.in (ஆங்கிலம்) - © Copyright 2017 ICAR-IARI, New Delhi. Retrieved 2025-08-25.
  4. "VARIETIES PERFORMED BETTER IN THE DISTRICT". www.kvkdk.org (ஆங்கிலம்) - © KVK DK, India. 2025. Retrieved 2025-08-25.
  5. Rice Variety information High altitude areas Single crop area
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_4&oldid=456455" இலிருந்து மீள்விக்கப்பட்டது