மங்கொம்பு - 5
மங்கொம்பு - 5 (MO 5 - Asha) எனப்படும் இந்த நெல் வகை, IR 11-1-66 மற்றும் Kochuvithu ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1981[2] ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, ஆஷா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]
| மங்கொம்பு - 5 MO 5 - Asha |
|---|
| வேளாண் பெயர் |
| ஆஷா (Asha) |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| IR 11-1-66 X Kochuvithu |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 115 - 120 நாட்கள் |
| வெளியீடு |
| 1981 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதியின் இரு பருவங்களுக்கும் ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு குறைந்த பாதிப்பும், பழுப்பு நிறத் தத்துப்பூச்சியை தாங்கும் தன்மை கொண்டது.[3]
நடுத்தர கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 115 – 120 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படும் இந்நெல் இரகம், குறுகிய தடித்த, இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும்.[3]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "MO 5-Asha". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-26.
- ↑ Varieties released by RRS Moncompu
- ↑ 3.0 3.1 "Asha (MO 5) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-26.