மங்கொம்பு - 8 (MO 8 - Aruna) எனப்படும் இந்த நெல் வகை, ஜெயா மற்றும் பட்டாம்பி - 33 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட,[1] தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு கலப்பின நெல் வகையாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம், 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, அருணா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[1]

மங்கொம்பு - 7
MO 8 - Aruna
வேளாண் பெயர்
அருணா (Aruna)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜெயா X PTB 33
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 110 நாட்கள்
வெளியீடு
1990
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

கேரளத்தின், ஆலப்புழா மாவட்டம், குட்டநாடு பகுதிக்கு ஏற்ற நெல் இரகமாக உள்ள இது, இலை உறை கருகல் மற்றும் இலையுறை அழுகல், பழுப்பு நிறத் தத்துப்பூச்சி மற்றும் தண்டு துளைப்பானை தாங்கும் தன்மையும், பித்தப்பை பூச்சியை மிதமாக எதிர்க்கும் திறனும் கொண்டது.[2] மேலும் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 100 – 110 நாட்களில் முதிர்வடைவதாகவும், குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற இரகமாகவும் உள்ள இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும்.[3]

சான்றுகள்

  1. 1.0 1.1 "MO 8-Aruna". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-27.
  2. "Aruna (MO 8) Medium duration varieties Season : Virippu (I crop / autumn), Mundakan (II crop / winter), Puncha (III crop / summer)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © TNAU 2025. Retrieved 2025-08-27.
  3. "Rice Variety information Kole lands Short duration Aruna(MO-8)". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-27.
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_8&oldid=456459" இலிருந்து மீள்விக்கப்பட்டது