மங்கொம்பு - 9 (MO 9 - Makom) எனப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் நெல் வகையாகும்.[1] ஜெயா மற்றும் ARC 6650 ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைந்த அமைப்பு முறையில் இணைத்து உருவாக்கப்பட்ட இது,[2] ஒரு கலப்பின புதிய நெல் இரகமாகும். இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மங்கொம்பு வேளாண் ஆய்வு நிறுவனமான நெல் ஆய்வு நிலையம்,[3] 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நெல் வகையை, மகோம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.[2]

மங்கொம்பு - 9
MO 9 - Makom
வேளாண் பெயர்
மகோம் (Makom)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஜெயா X ARC 6650
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 110 நாட்கள்
வெளியீடு
1990
வெளியீட்டு நிறுவனம்
நெல் ஆய்வு நிலையம், மங்கொம்பு
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

மூன்று பருவங்களிலும் பயிரிட ஏற்ற, குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 100 – 110 நாட்களில் முதிர்வடைவதாகவும், குறிப்பாக மழைக்காலத்திற்கு ஏற்ற இரகமாகவும் உள்ள இந்நெல் இரகத்தின் அரிசி, குட்டையான மற்றும் தடித்த, சிவப்பு நிறமாகும். மேலும் தண்டு துளைப்பான், பித்தப்பை பூச்சி, இலை சுருட்டுப்புழு மற்றும் இலையுறை அழுகல் போன்ற நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இந்நெல் இரகம்,[4] நீரில் முழுகும் காலத்தில் ஒரு மாதம் வரை முளைப்பு செயலற்ற தன்மையுடன் இருப்பதாக கூறப்படுகிறது.[3]

சான்றுகள்

  1. Paddy varieties of Kerala - Makom (MO 9)
  2. 2.0 2.1 "Varieties Released - MO 9-Makom". www.kau.in (ஆங்கிலம்) - List upto 2019. Retrieved 2025-08-28.
  3. 3.0 3.1 "Rice Variety information Kole lands Short duration Makom (MO-9):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-28.
  4. Varieties released/ identified MO.9 Makom
"https://tamilar.wiki/w/index.php?title=மங்கொம்பு_-_9&oldid=456460" இலிருந்து மீள்விக்கப்பட்டது