மார்க் பிசீ
சர் சார்லஸ் தாமஸ் மார்க் பிசீ (Sir Charles Thomas Mark Pizey) (17 சூன் 1899 - 17 மே 1993) ஒரு அரச கடற்படை அதிகாரி ஆவார். சுதந்திரத்திற்குப் பிறகு பிரிட்டிசு அதிகாரிகள் கடற்படையின் உயர்பதவியை தொடர்ந்து வகித்தனர்.அவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிந்தய காலங்களில் கடற்படையில் நடந்த அதிகார மாற்றங்களுக்குப் பிறகு 1951 முதல் 1955 வரை ராயல் இந்திய கடற்படையின் கடைசி தலைமைத் தளபதியாகவும் முதல் இந்திய கடற்படைத் தளபதியாகவும் பணியாற்றினார்.
அட்மிரல் அட்மிரல் சிர் மார்க் பிசீ | |
|---|---|
![]() 1943இல் மார்க் பிசீ | |
| இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி | |
| பதவியில் 21 சூலை 1955 – 21 சூலை 1955 | |
| குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் |
| பிரதமர் | ஜவகர்லால் நேரு |
| முன்னையவர் | பதவி இருவாக்கப்பட்டது |
| பின்னவர் | இசுடீவன் கோப் கார்லில் |
| இந்தியாவின் இர்ண்டாவது கடற்படைத் தளபதி | |
| பதவியில் 13 அக்டோபர் 1951 – 31 மார்ச் 1955 | |
| குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் |
| பிரதமர் | ஜவகர்லால் நேரு |
| முன்னையவர் | எட்வர்ட் பாரி |
| பின்னவர் | அலுவலகம் மாற்றப்பட்டது |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 17 சூன் 1899 சோமர்செட், இங்கிலாந்து |
| இறப்பு | 17 May 1993 (aged 93) பர்ன்காம் ஆன் சீ |
| இராணுவ சேவை | |
| பற்றிணைப்பு | ஐக்கிய ராச்சியம் Iஇந்தியா |
| கிளை/சேவை | அரச கடற்படை இந்தியக் கடற்படை |
| சேவை ஆண்டுகள் | 1912–1958 |
| தரம் | அட்மிரல் |
| போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் |
ஆரம்பகால வாழ்க்கை
பிசீ, சோமர்செட்டின் ஆக்ஸ்பிரிட்சில், ரெவரெண்ட் சார்லசு எட்வர்ட் பிசீ (1853–1932) மற்றும் செரால்டின் ஃபௌல் (1866–1949) ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.
கடற்படை வாழ்க்கை
இவர் 1912 இல் பிரிட்டிசு அரச கடற்படையில் சேர்ந்தார். இவர் முதல் உலகப் போரின் போது HMS கான்வே மற்றும் HMS ரிவெஞ்ச் ஆகியவற்றில் மிட்ஷிப்மேனாக பணியாற்றினார். இவர் டிசம்பர் 15, 1918 இல் துணை லெப்டினன்ட்டாகவும், டிசம்பர் 15, 1920 இல் லெப்டினன்ட்டாகவும் பதவி உயர்வு பெற்றார்.[1][2] மேலும் 1921 முதல் 1923 வரை எச்எம்எஸ் தானாவில் [3] இவர் தொடர்ந்து பல போர்க்கப்பல்களில் பணியாற்றி பல உயர்நிலைப் பதவிகளை வகித்தார்.
அக்டோபர் 1951 இல், இந்திய கடற்படையின் கடைசி தளபதியாக துணை அட்மிரல் எட்வர்ட் பாரிக்குப் பதிலாக பிசீ நியமிக்கப்பட்டார். 1953 ஆம் ஆண்டில் இவருக்கு பிரிட்டிசு பேரரசின் மிகச்சிறந்த KBE பட்டம் வழங்கப்பட்டது.[4] மேலும் டிசம்பர் 31, 1954 அன்று அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார் (டிசம்பர் 16 முதல் சீனியாரிட்டி).[5] ஏப்ரல் 1955 இல், பிசீ இந்திய கடற்படையின் முதல் கடற்படைத் தளபதியாக ஆனார். இதுவரைக்கும் இருந்த இந்திய கடற்படையின் தளபதி பதவிக்கு இது மாற்றானது. யுகோசுலாவியா நாட்டின் அரசியல்வாதி, பொதுவுடைமையாளர், மற்றும் அரசின் தலைவர் சோசப்பு பிரோசு டிட்டோ இந்தியாவிற்கு அரசு முறை பயணம் செய்தபோது அந்நாட்டின் உயரிய விருதான மக்கள் இராணுவத்தின் ஆணை (Orders of the Peoples Army) பிசீக்கு வழங்கப்பட்டது.
சூலை 1955 இல், துணை அட்மிரல் ஸ்டீபன் ஹோப் கார்லில் பிசீக்குப் பிறகு பதவியேற்றார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து அவர் பிளைமவுத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றினார். 1957 புத்தாண்டு கௌரவங்களில்,[6] இவர் பிரிட்டிஷ் பேரரசின் நைட் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆக பதவி உயர்வு பெற்றார், மேலும் 1958 இல் ஓய்வு பெற்றார். 1962 இல், இவர் சாமர்செட் மாவட்டத்தின் துணை லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டார். [3]
சொந்த வாழ்க்கை
1928 ஆம் ஆண்டு, பிசீ, ஃபிலிசு மே டி'ஆங்கிபாஎன்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருந்தனர்:
இறப்பு
சர் மார்க் பிசீ, மே 17, 1993 அன்று சோமர்செட்டில் உள்ள பர்ன்காம்-ஆன்-சீ -ல் தனது 93 ஆம் வயதில் இறந்தார்.
