முக்கூடல்
முக்கூடல், (ஆங்கிலம்: Mukkudal) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
| முக்கூடல் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| வட்டம் | சேரன்மாதேவி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
14,983 (2011[update]) • 975/km2 (2,525/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 15.36 சதுர கிலோமீட்டர்கள் (5.93 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/mukkudal |
பெயர்க் காரணம்
தாமிரபரணி ஆறு, மணிமுத்தாறு மற்றும் கடநா நதிகள் இவ்விடத்தில் கலப்பதால், இதற்கு முக்கூடல் எனப் பெயராயிற்று.
அமைவிடம்
முக்கூடல் பேரூராட்சிக்குக் கிழக்கே திருநெல்வேலி (20 கி.மீ.); மேற்கே அம்பாசமுத்திரம் (15 கி.மீ.); வடக்கே ஆலங்குளம் (19 கி.மீ.); தெற்கே சேரன்மாதேவி (11 கி.மீ.) ; வட மேற்கு கடையம் (15 கி.மீ.) தொலைவிலும் அமைந்துள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
15.36 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 107 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 6,298 வீடுகளும், 14,983 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
கோயில்கள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ முக்கூடல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Mukkudal Population Census 2011
- ↑ Mukkudal Town Panchayat