மூச்சு பாலம் (Breathing bridge) என்பது பெரு நாட்டில் உள்ள அமேசானாசு பிராந்தியத்தில் உள்ள ஆலமரங்களில் வான்வழி வேர்களிலிருந்து அமைக்கப்பட்ட உயிருள்ள வேர் பாலம் ஆகும்.

நுகக் மகு பழங்குடியினர் பல நூற்றாண்டுகளாக இந்த மரங்களின் வேர்களைக் கொண்டு, ஈரமான பருவத்தில் தன்னிச்சையாகத் தோன்றும் நீரோடைகளைக் கடந்து இத்தகைய வேர்ப்பாலங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் முதலில் ஆற்றின் கரையில் மரங்களை வளர்க்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வேர்கள் போதுமானதாக இருக்கும்போது இவர்கள் வேர்களை இணைத்துப் பாலங்களை அமைக்கத் தொடங்குகிறார்கள். இத்தகைய பாலங்கள் நீண்டகாலத் திட்டமாக ஒருவரின் வாழ்நாளில் முடிக்க முடியாது உள்ளது. எனவே இத்தகைய செயல் தலைமுறை தலைமுறையாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பாலங்களில் சில 100 அடி (30 மீட்டர்) நீளமும் 500 ஆண்டுகளுக்கு மேம்பட்டதாகவும் உள்ளன. பல தலைமுறைகளாக வாழக்கூடிய வளரும் நிலையான இந்தக் கட்டமைப்பு இயற்கைக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இயற்கையைச் சமாளித்து மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே நன்மை பயக்கும் உலகளாவிய சுற்றுச்சூழல் எடுத்துக்காட்டாக உள்ளன.[1][2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. NUKAK: Ethnoarchaeology of an Amazonian People பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1598742299
  2. SILVERWOOD-COPE, Peter L. 1990: Os makú, povo caçador do nordeste da Amazônia. Editora Universidade de Brasília.- பன்னாட்டுத் தரப்புத்தக எண் 85-230-0275-8
"https://tamilar.wiki/w/index.php?title=மூச்சு_பாலம்&oldid=473616" இலிருந்து மீள்விக்கப்பட்டது