மேப்பாடி (Meppadi) இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும். கோழிக்கோடு மற்றும் ஊட்டி நகரங்களுக்கு இடையேயான மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அருகிலுள்ள நகரம் வயநாடு வருவாய் மாவட்டத்தின் தலைமையகமான கல்பெட்டா ஆகும்.

மேப்பாடி
Meppadi

நகரம்
மேப்பாடி
மேப்பாடி Meppadi is located in கேரளம்
மேப்பாடி Meppadi
மேப்பாடி
Meppadi
ஆள்கூறுகள்: 11°33′28″N 76°07′55″E / 11.55786°N 76.13199°E / 11.55786; 76.13199
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
அரசு
 • வகைபஞ்சாயத்து இராச்சியம்
 • நிர்வாகம்மேப்பாடி கிராமப் பஞ்சாயத்து
நேர வலயம்UTC+5:30 (IST)
மேப்பாடி
மேப்பாடி புனித வளனார் தேவாலயம்
மேப்பாடியில் உள்ள பள்ளிக்கூடம்

வரலாறு

2024 நிலச்சரிவுகள்

2024 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் வயநாடு மாவட்டத்தில் நிகழ்ந்த கொடிய நிலச்சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மேப்படியும் ஒன்றாகும்.[1][2]

பொருளாதாரம்

மேப்பாடி கிராமத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கை தேயிலை சாகுபடி ஆகும். சிறிய அளவில் காய்கறி சாகுபடியும் உள்ளது. மேப்பாடியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக உள்ளனர். அங்கு அவர்கள் ஏலக்காயையும் பயிரிடுகிறார்கள். உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு உணவளிக்கும் ஒரு சிறிய நகரம் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தின் ஆரோக்கியமான காலநிலையை அனுபவிக்க வருகிறார்கள்.[3]

அமைவிடம்

வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பெட்டா நகரத்திலிருந்து மேப்படி 12 கி.மீ தொலைவில் உள்ளது. இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 78 கி.மீ தொலைவிலும், நிலம்பூரிலிருந்து 81 கி.மீ தொலைவிலும், ஊட்டியிலிருந்து 106 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 281 கி.மீ தொலைவிலும் உள்ளது.

படக் காட்சியகம்

சுற்றுலா

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Krishnakumar, R. (2024-07-31). "Death, debris drown Meppadi, five years after another killer landslide". Deccan Herald (in ஆங்கிலம்). Retrieved 2024-08-03.
  2. "Wayanad landslides: 133 dead, 481 saved, at least 98 missing". Onmanorama. 30 July 2024 இம் மூலத்தில் இருந்து 30 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240730073647/https://www.onmanorama.com/news/kerala/2024/07/30/wayand-landslide-kerala-rain-live.html. "In terms of fatalities, this is the largest landslide-related disaster to strike Kerala." 
  3. "Meppadi, Vaduvanchal, Destinations, Wayanad, District, Kerala, India".
  4. "Meppadi Tourism (2022): Best of Meppadi, India".
"https://tamilar.wiki/w/index.php?title=மேப்பாடி&oldid=475753" இலிருந்து மீள்விக்கப்பட்டது