யுரேனியம்-235
யுரேனியம்-235 (Uranium-235 அல்லது U-235) என்பது யுரேனியத்தின் ஓர் ஓரிடத்தான் ஆகும். இது இயற்கை யுரேனியத்தில் ஏறத்தாழ 0.72% ஐக் கொண்டுள்ளது. யுரேனியம்-238 ஐப் போலல்லாமல், இது பிளவுறும் தன்மையுடையது.
| படிமம்:HEUraniumC.jpg யுரேனியம்-235 இல் யுரேனியம் உலோகம் அதிக செறிவூட்டப்பட்டுள்ளது. | |
| பொது | |
|---|---|
| குறியீடு | 235U |
| பெயர்கள் | யுரேனியம்-235, U-235 |
| நேர்மின்னிகள் (Z) | 92 |
| நொதுமிகள் (N) | 143 |
| நியூக்லைடு தரவு | |
| இயற்கையில் கிடைக்குமளவு | 0.72% |
| அரைவாழ்வுக் காலம் (t1/2) | 703,800,000 ஆண்டுகள் |
| ஓரிடத்தான் நிறை | 235.0439299 Da |
| சுழற்சி | 7/2− |
| மேலதிக ஆற்றல் | 40914.062 ± 1.970 keV |
| பிணை ஆற்றல் | 1783870.285 ± 1.996 keV |
| கதிரியக்கத் தொடர்கள் | 235Pa 235Np 239Pu |
| சிதைவு விளைபொருள்கள் | 231Th |
| Decay modes | |
| சிதைவு முறை | சிதைவு ஆற்றல் (MeV) |
| ஆல்ஃபா | 4.679 |
| Isotopes of யுரேனியம் நியூக்லைடுகளின் முழுமையான அட்டவணை | |
யுரேனியம்-235 இன் அரைவாழ்வுக் காலம் 703.8 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது 1935 ஆம் ஆண்டில் ஆர்தர் ஜெஃப்ரி டெம்ஸ்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ "Some Physics of Uranium". Archived from the original on 2007-07-17. Retrieved 2013-08-23.
- Table of Nuclides.
- DOE Fundamentals handbook: Nuclear Physics and Reactor theory Vol. 1 பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம், Vol. 2 பரணிடப்பட்டது 2009-03-22 at the வந்தவழி இயந்திரம்.
வெளி இணைப்புகள்
- Uranium | Radiation Protection Program | US EPA
- "The Miracle of U-235", பாப்புலர் மெக்கானிக்ஃசு, January 1941—one of the earliest articles on U-235 for the general public