ராஸ்பெரி
ராசுபெரி (Raspberry) ரூபசு பேரினம், ரோசா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த பழமாகும். இவற்றில் பெரும்பாலானவை துணைப்பேரினம் இதியோபதுசில் உள்ளடங்கியவையாகும். ராசுபெரி ஒரு முக்கியமாகப் பயிர் செய்யப்படும் வணிக பழவகையாகும், இவை பரவலாக உலகின் அனைத்து மிதவெப்ப பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான நவீன சிவப்பு ராசுபெரிகள் ர.இதியஸ் மற்றும் ர.இசுதிரிகோசுசில் இருந்து கலப்பினம் செய்யப்பட்டவையாகும்.[1] இவை விரைவான உறைந்த பழம், கூழ், சாறு, அல்லது உலர்ந்த பழங்கள் போன்றவையாக உபயோகப்படுத்தபடுகின்றன.
வணிக ரீதியான உற்பத்தி
| ராசுபெரி தயாரிப்பாளர்கள் ஆயிரம் கிலோக்களில் | ||||
|---|---|---|---|---|
| நாடு | 2010 | 2011 | ||
| உருசியா | 125,000 | 27% | 140,000 | 26% |
| போலந்து | 92,864 | 20% | 117,995 | 22% |
| செர்பியா | 83,870 | 18% | 89,602 | 16% |
| ஐக்கிய அமெரிக்கா | 36,741 | 8% | 48,948 | 9% |
| உக்ரைன் | 25,700 | 5% | 28,100 | 5% |
| மெக்சிக்கோ | 14,343 | 3% | 21,468 | 4% |
| ஐக்கிய இராச்சியம் | 17,000 | 4% | 16,761 | 3% |
| கனடா | 11,864 | 3% | 12,285 | 2% |
| படிமம்:Flag of Azerbaijan.svg அசர்பைஜான் | 10,100 | 2% | 11,000 | 2% |
| எசுப்பானியா | 9,226 | 2% | 9,559 | 2% |
| மொத்தம் | 471,322 | 100% | 543,421 | 100% |
|
| ||||
மேற்கோள்கள்
- ↑ Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-333-47494-5.
- ↑ "Statistics from: Food And Agricultural Organization of United Nations: Economic And Social Department: The Statistical Division". UN Food and Agriculture Organization Corporate Statistical Database.