ரீத்தாபுரம் (ஆங்கிலம்:Reethapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி கருங்கல்குளச்சல் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

ரீத்தாபுரம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

21,177 (2011)

3,755/km2 (9,725/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 5.64 சதுர கிலோமீட்டர்கள் (2.18 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/reethapuram

அமைவிடம்

கன்னியாகுமரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்த ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு அருகமைந்த தொடருந்து நிலையம், 10 கி.மீ. தொலைவில் உள்ள இரணியலில் உள்ளது.

அருகமைந்த ஊர்கள்

ரீத்தாபுரத்தின் கிழக்கில் நாகர்கோவில் 20 கி.மீ.; மேற்கே தேங்காப்பட்டினம் 21 கி.மீ.; வடக்கே மார்த்தாண்டம் 17 கி.மீ.; தெற்கே குளச்சல் 2 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

5.64 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,210 வீடுகளும், 21,177 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ரீத்தாபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Reethapuram Population Census 2011
  5. Town Panchayat
"https://tamilar.wiki/w/index.php?title=ரீத்தாபுரம்&oldid=484669" இலிருந்து மீள்விக்கப்பட்டது