லால்புரம்
லால்புரம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகருக்கு அருகிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
லால்புரம் | |
|---|---|
லால்புரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 11°25′09″N 79°41′12″E / 11.4191°N 79.6867°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கடலூர் |
| ஏற்றம் | 19.87 m (65.19 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 608602 |
| தொலைபேசிக் குறியீடு | +914144****** |
| புறநகர்ப் பகுதிகள் | சிதம்பரம், புவனகிரி, கீரப்பாளையம், பள்ளிப்படை |
| மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
| சட்டமன்றத் தொகுதி | சிதம்பரம் |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 19.87 மீ. உயரத்தில், (11°25′09″N 79°41′12″E / 11.4191°N 79.6867°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு லால்புரம் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், லால்புரம் ஊரின் மொத்த மக்கள்தொகை 4,678 பேர் ஆகும். இதில் 2,332 பேர் ஆண்கள் மற்றும் 2,346 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
தொடர்ந்தாலம்மன் கோயில் என்ற கிராமக் கோயில் ஒன்று லால்புரம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
லால்புரம் பகுதியானது, சிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ "Lalpuram Pin Code - 608602, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-10.
- ↑ K. Srinivasamoorthy, S. Aravindan (2007). Mineral Exploration: Recent Strategies (in ஆங்கிலம்). New India Publishing. ISBN 978-81-89422-71-4.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Lalpuram (லால்புரம் )". localbodydata.com. Retrieved 2025-01-10.
- ↑ "Lalpuram Village Population - Chidambaram - Cuddalore, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-10.
- ↑ "Arulmigu Thodarndhalamman Temple, Lalpuram - 608602, Cuddalore District [TM022010].,". hrce.tn.gov.in. Retrieved 2025-01-09.
- ↑ "Lalpuram Village , Melbhuvanagiri Block , Cuddalore District". www.onefivenine.com. Retrieved 2025-01-10.