லும்பினி,(நேபாளி மொழி & சமஸ்கிருதம் लुम्बिनी Audio file "Ne-Lumbini.oga" not found,பொருள்:"விரும்பத்தகுந்த") நேபாள நாட்டின் லும்பினி மாநிலம், ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள பௌத்த புனிதயாத்திரைத் தலமாகும். இது நேபாள - இந்திய எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்திலேயே அரசி மாயாதேவி, சித்தார்த்தன் எனும் கௌதம புத்தரைப் பெற்றெடுத்தார். இவரே புத்த மதத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லும்பினி, புத்தரின் பிறப்பிடம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
படிமம்:Lumbini 4.jpg
வகைபண்பாடு
ஒப்பளவுiii, vi
உசாத்துணை666
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21ஆவது தொடர்)

लुम्बिनी

நகரம்
நாடுநேபாளம்
மாநிலம்லும்பினி மாநிலம்
மாவட்டம்ரூபந்தேஹி
ஏற்றம்
150 m (490 ft)
மொழிகள்
 • அலுவல் மொழிநேபாளி மொழி
நேர வலயம்ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
32914
இடக் குறியீடு71
படிமம்:Lumbini - Excavated Buildings, Lumbini (9241388221).jpg
லும்பினி, கௌதம புத்தர் பிறந்த இடம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட, உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்று

புத்த மதத்தினரைப் பெருமளவில் கவரும் ஐந்து புனித யாத்திரைத் தலங்களுள் லும்பினியும் ஒன்று. ஏனைய நான்கு குசிநகர், புத்த காயா, வைசாலி மற்றும் சாரநாத் என்பனவாகும். லும்பினி இமய மலை அடிவாரத்தில் உள்ளது. இது கௌதம புத்தர் தனது 29 ஆவது வயது வரை வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கபிலவஸ்து நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

லும்பினியில் மாயாதேவி கோயில் உள்ளிட்ட பல கோயில்களும், புஷ்கர்னி எனப்படும் புனித ஏரியும் உள்ளன. இந்த ஏரியில் கௌதம புத்தரைப் பெற்றெடுக்குமுன் மாயா தேவி மூழ்கி எழுந்ததாகக் கூறப்படுகிறது. புத்தரின் முதற் குளியலும்கூட இந்த ஏரியிலேயே இடம்பெற்றது. இங்கே கபிலவஸ்து அரண்மனையின் இடிபாடுகளையும் காணமுடியும்.

லும்பினியை யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.[1]

பார்க்க வேண்டிய பிற இடங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=லும்பினி&oldid=488556" இலிருந்து மீள்விக்கப்பட்டது