லுலுசார் ( Lulusar),அல்லது லாலுசர் என்பதுபாக்கித்தானின் கைபர்-பக்துன்வா மாகாணத்தில் உள்ள ககன் பள்ளத்தாக்கில் உள்ள மலை சிகரங்களாகும். இங்கு இதே பெயரில் ஒரு ஏரியும் உள்ளது.

லுலுசார்
لالو سر
படிமம்:Lulusar Lake, Naran, KPK, Pakistan.JPG
லுலுசார் ஏரி
அமைவிடம்ககன் பள்ளத்தாக்கு, மன்செரா மாவட்டம், கைபர் பக்துன்வா
ஆள்கூறுகள்35°0′8.04″N 73°9′2.66″E / 35.0022333°N 73.1507389°E / 35.0022333; 73.1507389 (Lulusar Lake)
ஏரி வகைஅல்பைன்/பனிப்பாறை ஏரி
Part ofசிந்து ஆற்றின் வடிநிலம்
முதன்மை வரத்துபனிப்பாறை உருகுவதால் கிடைக்கும் நீர்
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,410 m (11,190 அடி) [1]
குடியேற்றங்கள்ககன் பள்ளத்தாக்கு, நரன், பாலாகோட்

லுலுசார் ஏரி

படிமம்:Lulusar Lake Gilgit.jpg
லுலுசார் ஏரி

லுலுசார் ஏரி ( லுலுசிர் என்றும் அழைக்கப்படுகிறது) 3,410 மீ (11,190 அடி) உயத்தில் அமைந்துள்ள ஒரு ஏரியாகும். இது குன்கர் ஆற்றின் முதன்மையான நீர்நிலையான இது ககன் பள்ளத்தாக்கின் முழு நீளம் வழியாக தென்மேற்கே பாய்கிறது, ஜல்கண்ட், நரன், ககன், ஜாரெட், பராஸ் மற்றும் பாலாகோட்டை கடந்து ஜீலம் ஆற்றுடன் சங்கமிக்கும் வரை இது பாய்கிறது. இது நரனில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர்கள் (31 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[2] [3]

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

  1. "Lulusar Lake". Tourism Development Corporation of Punjab (TDCP). Archived from the original on 7 January 2009. Retrieved 9 January 2009.
  2. "Lulusar Lake | Pakistan Tourism Portal". paktourismportal.com. Retrieved 23 September 2022.
  3. "Lulusar (also known as Lulusir) Lake - Distance from Naran". Ajktours.com. Retrieved 12 August 2018.
"https://tamilar.wiki/w/index.php?title=லுலுசார்&oldid=488573" இலிருந்து மீள்விக்கப்பட்டது