வட்டகொடை
வட்டகொடை (Watagodde) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலைப் பெருந்தோட்டத்தின் பெயரும் வட்ட கொடையாகும். இஃது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தலவாக்கலை, கிரேட் வெசுடன் தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இந்நகர் தலவாக்கலை-பூண்டுலோயா- தவலந்தன்னை பெருந்தெருவில் பூண்டுலோயாவுக்கும் தலவாக்கலைக்கும் இடையே அமைந்துள்ளது.
| வட்டகொடை | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
| அமைவிடம் | 6°58′13″N 80°38′53″E / 6.9703°N 80.6481°E |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1335 மீட்டர் |
| கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
ஆதாரம்
- புவியியல் ஆள்கூறுகள்: (6°58′58″N 80°38′53″E / 6.98278°N 80.64806°E)