வைட்டிலா - 9
வைட்டிலா - 9 (VTL 9) எனப்படும் இந்த நெல் வகை, கேரளாவின் ஒரு புதிய நெல் இரகமாகும். நீண்ட கால நெல் இரகமாக அறியப்படும் இது, ஏற்கனவே உள்ள இரகத்துடன் (8 dsm) ஒப்பிடும்போது, 12 dsm உப்புத்தன்மையைத் தாங்கும் திறன் கொண்டது எனவும், வைட்டிலா - 6 இரகத்தை விட 10% கூடுதல் விளைச்சல் தருவதாக கருதப்படுகிறது.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில எர்ணாகுளம் மாவட்டம், வைட்டிலா பகுதியில் அமைந்துள்ள "நெல் ஆராய்ச்சி நிலையம்" (RRS), 2015 ஆம் ஆண்டு[1][2] இந்த நெல் இரகத்தை வெளியிடபட்டதாக அறியப்படுகிறது.[3]
| வைட்டிலா - 9 VTL 9 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| வெளியீடு |
| 2015 |
| வெளியீட்டு நிறுவனம் |
| நெல் ஆராய்ச்சி நிலையம் (RRS), வைட்டிலா |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
110 - 115 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படும் இந்நெல் இரகத்தின் அரிசி, நடுத்தர சிவப்பு நிறமாகும். அதிக உப்புத்தன்மை கொண்ட கடலோரப் பகுதிகளில் சம்பா சாகுபடி பருவத்திற்கு ஏற்றது எனப்படும் இது, அதிக மகசூல் தரும் உப்புத்தன்மையைத் தாங்கும் இரகமாகும், மேலும் இது நீரில் மூழ்குவதையும் தாங்கும் தன்மை கொண்டது எனவும் கூறப்படுகிறது. [4]
சான்றுகள்
- ↑ 1.0 1.1 "Varieties Released -". rice-garud.icar-web.com (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-10-14.
- ↑ Varieties Released - (List upto 2019)
- ↑ Rice Research Station, Vyttila
- ↑ "Rice Variety information Pokkali lands". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-14.