வோல்டா ஏரி
வோல்டா ஏரி (Lake Volta) பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். கொள்ளளவு அடிப்படையில் இது உலகில் நான்காவது மிகப்பெரிய ஏரி ஆகும். இந்த ஏரி முழுவதும் கானா நாட்டில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 8,502 கி.மீ.² (3,275 சதுர மைல்கள்). வோல்டா ஏரி தீர்க்கரேகை நடுக்கோட்டில் அமைந்துள்ளது. நிலநடுக் கோட்டின் வடக்கில் ஆறு டிகிரி அகலாங்கில் இந்த ஏரி அமைந்துள்ளது. ஏரியின் வடக்கு பகுதி எப்பை நகரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. மேலும் இதன் தென்முனை அகோசொம்போ அணையில் முடிகிறது.
| வோல்டா ஏரி | |
|---|---|
| அமைவிடம் | மேற்கு கிழக்கு |
| ஆள்கூறுகள் | 6°30′N 0°0′E / 6.500°N 0.000°E |
| வகை | நீர்த்தேக்கம் |
| முதன்மை வரத்து | வெள்ளை வோல்டா ஆறு கருப்பு வோல்டா ஆறு |
| முதன்மை வெளியேற்றம் | வோல்டா ஆறு |
| வடிநிலப் பரப்பு | 385,180 km2 (148,720 sq mi) |
| வடிநில நாடுகள் | கானா |
| மேற்பரப்பளவு | 8,502 km2 (3,283 sq mi) |
| சராசரி ஆழம் | 18.8 m (62 அடி) |
| அதிகபட்ச ஆழம் | 75 m (246 அடி) |
| நீர்க் கனவளவு | 148 km3 (32.6 × 1012 gallons) |
| கரை நீளம்1 | 4,800 கிலோமீட்டர்கள் (2,980 mi) |
| கடல்மட்டத்திலிருந்து உயரம் | 85 m (279 அடி) |
| 1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று. | |
படங்கள்
-
ஏரியில் பயணப்படகு
-
வோல்டா ஏரியின் ஒரு படம்.
-
வோல்டா ஏரியில் உள்ள மரங்கள்.