2-பென்டைன்
2-பென்டைன் (2-Pentyne) என்பது C5H8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்தில்மெத்திலசிடைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின் என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. 1-பென்டைன் சேர்மத்தின் மாற்றியனாகக் கருதப்படும் இதுவொரு அகவியல் பென்டைன் ஆகும். 1-பென்டைன் ஒரு புறவியல் ஆல்க்கைன் ஆகும்.
| Skeletal formula of 2-pentyne | |
| Ball-and-stick model of 2-pentyne | |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
பென்ட்-2-ஐன்
| |
| வேறு பெயர்கள்
எத்தில்மெத்திலசிட்டைலின், 1-எத்தில்-2-மெத்திலசிட்டைலின்
| |
| இனங்காட்டிகள் | |
| 627-21-4 | |
| ChemSpider | 11807 |
| யேமல் -3D படிமங்கள் | Image Image |
| பப்கெம் | 12310 |
| |
| பண்புகள் | |
| C5H8 | |
| வாய்ப்பாட்டு எடை | 68.12 |
| அடர்த்தி | 0.71 கி/மி.லி |
| உருகுநிலை | −109 °C (−164 °F; 164 K) |
| கொதிநிலை | 56 to 57 °C |
| தீங்குகள் | |
| தொழில்சார் நலமும் பாதுகாப்பும்: | |
முக்கிய இடர்கள்
|
தீப்பற்றி எரியும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |

தொகுப்புமுறை தயாரிப்பு
எத்தனாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலுடன் 1-பென்டைன் சேர்ப்பதன் மூலமாக மறு சீரமைப்பு வினையால் 2-பென்டைன் உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
- ↑ Victor von Richter and Hans Meerwein (1916). Organic Chemistry: Chemistry of the aliphatic series Vol. I: Smith's 3rd American Ed. Philadelphia: P. Blakiston's Sons & Co. p. 89.
.