ஜே. டி. ஜெரி

imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 06:40, 18 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''ஜே. டி.''' (''J.D'') மற்றும் '''ஜெரி''' (''Jerry'') என்பவர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள். இவர்கள் இருவரும் ஒரு குழுவாக இனைந்து பல திரைப்படங்களுக்கு க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

ஜே. டி. (J.D) மற்றும் ஜெரி (Jerry) என்பவர்கள் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள். இவர்கள் இருவரும் ஒரு குழுவாக இனைந்து பல திரைப்படங்களுக்கு கதைகள் எழுதியுள்ளனர். இவர்கள் இயக்கிய முதல் தமிழ்த் திரைப்படமான உல்லாசம், அமிதாப் பச்சன் தயாரிப்பில் 1997ல் வெளிவந்தது. உல்லாசம் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் அஜித் குமாரும், விக்ரமும் நடித்துள்ளனர். 2003ல் வெளிவந்த மற்றொரு தமிழ்த் திரைப்படமான விசில் என்பதையும் இவர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வருகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜே._டி._ஜெரி&oldid=104130" இலிருந்து மீள்விக்கப்பட்டது