சுரண்டை
| சுரண்டை | |
| அமைவிடம் | 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தென்காசி மாவட்டம் |
| வட்டம் | வீரகேரளம்புதூர் வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
35,272 (2011[update]) • 1,357/km2 (3,515/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
26 சதுர கிலோமீட்டர்கள் (10 sq mi) • 132 மீட்டர்கள் (433 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/surandai |
சுரண்டை (Surandai), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 2008-ஆம் ஆண்டு சுரண்டை அரசுக் கலைக் கல்லூரியானது, இவ்வூரில் தமிழக அரசால் துவங்கப்பட்டுள்ளது. 19 ஜூலை 2019-ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அன்று முதல் சுரண்டை பேரூராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. 24.08.2021 அன்று சுரண்டை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்
சுரண்டை மக்கள் தொகை வளர்ச்சியின் காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]
அமைவிடம்
சுரண்டை திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும், அத்தியூத்து விலக்கில் இருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசைக்கு அருகில் உள்ள இ. நா. விலக்கில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
- திருநெல்வேலி - 48 கி.மீ
- சங்கரன்கோவில் - 30 கி.மீ
- புளியங்குடி - 30 கி.மீ
- பாவூர்சத்திரம் - 9 கி.மீ
- கடையநல்லூர் - 15 கி.மீ
- ஆலங்குளம் - 17கி.மீ
- தென்காசி - 15 கி.மீ
போக்குவரத்து
திருநெல்வேலி மற்றும் தென்காசி நகருக்கு அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் மகாத்மாகாந்தி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்து நிலையம் 2019-ஆம் வருடம் புதுப்பிக்கப்பட்டது. திருநெல்வேலி, சங்கரன்கோவில், இருக்கண்குடி, புளியங்குடி, கடையநல்லூர், ஆலங்குளம், செங்கோட்டை, பாபநாசம், ஆய்க்குடி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளுக்கு பேருந்து வசதி உள்ளது. சுரண்டையில் இருந்து இராஜபாளையம், மதுரைக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து கான்சாபுரம் வத்திராயிருப்பு, தளவாய்புரம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுரண்டையில் இருந்து அண்மை கிராமங்களான ஊத்துமலை, கீழக்கலங்கல், ரெட்டியார்பட்டி, வீ.கே.புதூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியில் இருந்து சுரண்டை வழியாக சென்னைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. ஆலங்குளத்தில் இருந்து சுரண்டை வழியாக திருப்பூருக்கு பேருந்து இயக்கப்படுகிறது. சுரண்டையில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலம் கொட்டாரக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவைதவிர தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை, கோவை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படுகின்றன.
நகராட்சி அமைப்பு
26 சகிமீ பரப்பும், 27வார்டுகள் கொண்ட இந்த நகராட்சி ஆகும்.
தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] ஆலடிப்பட்டி ) ஆவார்
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 9511 வீடுகளும், 35272 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 8°58′N 77°24′E / 8.97°N 77.4°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 132 மீட்டர் (433 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Govt upgrades nine town panchayats as municipalities
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Surandai Population Census 2011
- ↑ "Surandai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)