கோத்தகிரி
கோத்தகிரி (ஆங்கிலம்:Kotagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வட்டம் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், முதல்நிலை பேரூராட்சியும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.
| கோத்தகிரி | |
| அமைவிடம் | 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நீலகிரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 29,184 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 1,793 மீட்டர்கள் (5,883 அடி) |
அமைவிடம்
கோத்தகிரி பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலையில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி பேரூராட்சி, மேட்டுப்பாளையத்திலிருந்து 32 கிமீ; உதகமண்டலத்திலிருந்து 30 கிமீ; குன்னூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
30.93 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7860 வீடுகளும், 28207 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990 மீட்டர் (5882 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்
- கொடநாடு காட்சி முனை
- கேத்தரின் அருவி
- சல்லிவன் நினைவகம்
இதனையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/kotagiri/population
- ↑ Kotagiri Population Census 2011
- ↑ Kotagiri Town Panchayat
- ↑ "Kotagiri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)