கோத்தகிரி (ஆங்கிலம்:Kotagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி வட்டம் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், முதல்நிலை பேரூராட்சியும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

கோத்தகிரி
கோத்தகிரி
இருப்பிடம்: கோத்தகிரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E / 11.43; 76.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 29,184 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,793 மீட்டர்கள் (5,883 அடி)

அமைவிடம்

கோத்தகிரி பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலையில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி பேரூராட்சி, மேட்டுப்பாளையத்திலிருந்து 32 கிமீ; உதகமண்டலத்திலிருந்து 30 கிமீ; குன்னூரிலிருந்து 24 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

30.93 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7860 வீடுகளும், 28207 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E / 11.43; 76.88 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990 மீட்டர் (5882 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பேரூராட்சியின் இணையதளம்
  5. http://www.townpanchayat.in/kotagiri/population
  6. Kotagiri Population Census 2011
  7. Kotagiri Town Panchayat
  8. "Kotagiri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=கோத்தகிரி&oldid=130167" இலிருந்து மீள்விக்கப்பட்டது