தேனி
மதுரையிலிருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ளது தேனி (ஆங்கிலம்:Theni)நகரம். வேளாண்மை சார்ந்த தொழில்கள் தேனி மாவட்டத்தில் சிறந்து விளங்குகின்றன. தேனி நகரம் இங்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் நடைபெறுகின்ற சந்தைக்குப் புகழ் பெற்றது. இந்நகரில் பருத்தி வணிகம் பல்லாண்டுகளாக வெகு சிறப்புடன் நடைபெற்று வருகின்றது.
| தேனி | |||||
| — hq — | |||||
| அமைவிடம் | 10°00′32″N 77°28′12″E / 10.009°N 77.47°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | Tamil Nadu | ||||
| மாவட்டம் | Theni | ||||
| ஆளுநர் | |||||
| முதலமைச்சர் | |||||
| மக்களவைத் தொகுதி | தேனி | ||||
| மக்களவை உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
10,34,724 (2001[update]) • 358/km2 (927/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
2,889 சதுர கிலோமீட்டர்கள் (1,115 sq mi) • 100 மீட்டர்கள் (330 அடி) | ||||
| தட்பவெப்பம் • மழைவீழ்ச்சி |
Aw (Köppen) • 658 mm (25.9 அங்) | ||||
|
தொலைவு(கள்)
| |||||
|
குறியீடுகள்
| |||||
மாவட்டத்தின் அமைப்பு
தேனி நகரம் அதனைச் சுற்றிலும் கிட்டத்தட்ட சம தொலைவில் அமைந்துள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர் நகராட்சிகளைக் கொண்டுள்ளது.
காணவேண்டிய இடங்கள்
தேனி பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலுள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்குள்ள பழமையான கோவில்களுள் ஒன்று. தேனி மாவட்டம் இயற்கை எழிலகொஞ்சும் பகுதியாகும் தேனி அருகில் அரண்மனைபுதூர் என்னும் ஊர் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு வேதபுரி என்னும் இடத்தில் மிக எழில் பொங்கும் குருபகவான் கோவில் அமையப்பெற்றுள்ளது. மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் பூஜைகள் அங்கு நடைபெறுகின்றன. வியாழக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. மற்ற கோயில்களில் இல்லாத அமைதியான சூழ்நிலையும் வழிபாடும் இங்கு வருபவர் மன ஒருமைக்கு பெரிதும் வழிவகுக்கிறது. அமைதியான மனத்தில் இறைவன் உறைவான் என்பதை இங்கு நன்கு உணர முடியும்.
வெளி இணைப்புகள்
தேனி மாவட்டம் இயற்கை எழிலகொஞ்சும் பகுதியாகும்