செங்கம்
| செங்கம் | |
| — இரண்டாம் நிலை நகராட்சி — | |
| ஆள்கூறு | 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| வட்டம் | செங்கம் வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | வந்தனா கார்க், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 26,980 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 272 மீட்டர்கள் (892 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/chengam |
செங்கம் (ஆங்கிலம்:Chengam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டம் மற்றும் செங்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]யும் ஆகும். இங்கு செங்கம் ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது.
அமைவிடம்
திருவண்ணாமலை - பெங்களூரு வழித்தடத்தில் அமைந்த செங்கம் பேரூராட்சி, திருவண்ணாமலையிலருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது. இதன் வடக்கே போளூர் 49 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. செங்கம் பேரூராட்சியின் இணையதளம் </ref>
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,160 வீடுகளும், 26,980 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.82% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். [4]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. [6] இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Chengam Population Census 2011
- ↑ "Chengam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ https://temple.dinamalar.com/New.php?id=1037