ஆள்கூறுகள்: 12°34′N 79°26′E / 12.57°N 79.43°E / 12.57; 79.43

பெரணமல்லூர்

தமிழர்விக்கியிலிருந்து
14.98.187.46 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:08, 22 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (அமைவிடம்)
Jump to navigation Jump to search
பெரணமல்லூர்
பெரணமல்லூர்
இருப்பிடம்: பெரணமல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°34′N 79°26′E / 12.57°N 79.43°E / 12.57; 79.43
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் வந்தவாசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

5,801 (2011)

386/km2 (1,000/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15.02 சதுர கிலோமீட்டர்கள் (5.80 sq mi)

135 மீட்டர்கள் (443 அடி)

இணையதளம் www.townpanchayat.in/pernamallur

பெரணமல்லூர் (ஆங்கிலம்:Peranamallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி வட்டம் மற்றும் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

பெரணமல்லூர் பேரூராட்சியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் இஞ்சிமேடு பெரியமலை சிவனாலயம் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திலும் திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை போல இங்கும் கார்த்திகை தீபம், 1999-ம் ஆண்டு முதல் ஏற்றப்படுகிறது.

அமைவிடம்

திருவண்ணாமலை]]யிலிருந்து 63 கிமீ தொலைவில் உள்ள பெரணமல்லூர் பேரூராட்சிக்கு கிழக்கே வந்தவாசி 23 கிமீ; மேற்கே ஆரணி 22 கிமீ; வடக்கே செய்யாறு 25 கிமீ மற்றும் தெற்கில் பெரிய கொழப்பலூர் 14 கிமீ தொலைவிலும், தேசூர் 23 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

15.02 சகிமீ பரப்பும் , 12 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 45 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,801 மக்கள்தொகை கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 869 மற்றும் 54 ஆகவுள்ளனர். [5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°34′N 79°26′E / 12.57°N 79.43°E / 12.57; 79.43 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 135 மீட்டர் (442 அடி) உயரத்தில் இருக்கின்றது.

பெரணமல்லூர்  வரலாறு

இரு அரச படையினர் போர் செய்ததால் ஊருக்கு "பேரணிமல்லூர்' என்ற பெயர் ஏற்பட்டு, பேரணிநல்லூர் என மருவியது. காலப்போக்கில் பெரணமல்லூர் ஆகிவிட்டது. பனையாற்றின் குறுக்கே பெரிய அணை கட்டப்பட்டதாலும், இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். சோழ மன்னன் தன் படைகளுடன் பழையாறைக்குச் செல்லும்போது, இங்குதான் தங்கி ஓய்வெடுப்பார். இதனால், இந்த ஊர் சுற்று வட்டார கிராமங்களுக்கு தலைமையிடமாக இருந்துள்ளது.

கல்வி நிலையங்கள்

பெரணமல்லூரில் உள்ள இவ்விரு பாடசாலைகளில் இருந்து பல்வேறு கல்வியாளர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்
அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி - பெரணமல்லூர்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. பெரனமநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Peranamallurm Population Census 2011
  6. "Peranamallur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பெரணமல்லூர்&oldid=169045" இலிருந்து மீள்விக்கப்பட்டது