அவிநாசி
அவிநாசி (ⓘ) (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி வட்டம் மற்றும் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இங்கு, சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரர் பாடி, பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
| அவிநாசி | |
| ஆள்கூறு | 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| வட்டம் | அவிநாசி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3] |
| சட்டமன்றத் தொகுதி | அவிநாசி
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 28,868 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 314 மீட்டர்கள் (1,030 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/avanasi |
அமைவிடம்
அவிநாசி பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 18 கிமீ; கோயம்புத்தூர் 40 கிமீ., தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
11.65 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 82 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அவிநாசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,443 வீடுகளும், 28,868 மக்கள்தொகையும் கொண்டது.[5]
வரலாறு
கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் முதன்மையானது ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°12′N 77°17′E / 11.2°N 77.28°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[7] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ அவிநாசி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Avanashi Population Census 2011
- ↑ "Avanashi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)