ஒடுகத்தூர்

imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 23:19, 29 ஏப்பிரல் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Sumathy1959ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)

ஒடுகத்தூர் (ஆங்கிலம்:Odugathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.

ஒடுகத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் அணைக்கட்டு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,998 (2011)

1,125/km2 (2,914/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/odugathur

அமைவிடம்

ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே வேலூர் 48 கிமீ; மேற்கே ஆம்பூர் 19 கிமீ; வடக்கே குடியாத்தம் 33 கிமீ; தெற்கே மேலரசம்பட்டு ஊராட்சி 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் குடியாத்தத்தில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77.07% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Odugathur Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=ஒடுகத்தூர்&oldid=177852" இலிருந்து மீள்விக்கப்பட்டது