சங்ககிரி

imported>Sivakumar பயனரால் செய்யப்பட்ட 13:55, 10 அக்டோபர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (+விக்கியாக்கம்)

சங்ககிரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது[சான்று தேவை]. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.

பொருளாதாரம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

வரலாறு

சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=189294" இலிருந்து மீள்விக்கப்பட்டது