சங்ககிரி

27.62.247.237 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 20:21, 18 திசம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (வரலாறு: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)


சங்ககிரி என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.

சங்ககிரி
—  பேரூராட்சி  —
சங்ககிரி
அமைவிடம்: சங்ககிரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E / 11.48; 77.87
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி சங்ககிரி

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுந்தரராஜன் (அதிமுக)

மக்கள் தொகை 27,402 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.sankagiri.com
படிமம்:Sankagiri hill.jpg
சங்ககிரி மலை

பொருளாதாரம்

படிமம்:Regional Transport Office - Sankagiri.jpg
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

படிமம்:Orukkamalai 1.jpg
சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை

வரலாறு

சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது எந்த ஒரு பராமரிப்பும் சேய்யப்படமல் கவனிப்பின்ரி இருக்கிறது.

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=189309" இலிருந்து மீள்விக்கப்பட்டது