வால்பாறை
வால்பாறை (ஆங்கிலம்:Valparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சி ஆகும்.
| வால்பாறை | |||
| — தேர்வு நிலை நகராட்சி — | |||
| ஆள்கூறு | 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | கோயம்புத்தூர் | ||
| வட்டம் | வால்பாறை | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] | ||
| நகர்மன்றத் தலைவர் | |||
| சட்டமன்றத் தொகுதி | வால்பாறை
- | ||
| சட்டமன்ற உறுப்பினர் |
டி. கே. அமுல் கந்தசாமி (அதிமுக) | ||
| மக்கள் தொகை | 70,859 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
• 1,193 மீட்டர்கள் (3,914 அடி) | ||
|
குறியீடுகள்
| |||


புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]
போக்குவரத்து
பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 ஹேர்பின் வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறை இருந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பழனி ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது
கல்வி நிறுவனங்கள்
மலைகளின் இளவரசி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Valparai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்